- Saturday
- January 18th, 2025
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வாகன எரியூட்டல் தொழில்நுட்பத்தை தற்பொழுது வடபிராந்திய பேருந்து ஊழியர்களும் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் குறைந்த செலவில் அதிக இலாபத்தினைப் பெறமுடிவதாக சம்மந்தப்பட்ட பேருந்து உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தனியார் போக்குவரத்துத் துறையில் காணப்படும் போட்டித்தன்மைகளாலும் எரிபொருள் விலையேற்றங்களினாலும் குறுந்தூர மற்றும் நெடுந்தூர பேருந்து உரிமையாளர்கள்...
வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்று சம்பள முரண்பாட்டினைச் சரி செய்யத் தவறியமை, 2015 ஆம் வருட முறைகேடான சம்பளக் கொள்ளை மற்றும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடமாகாண பிராந்திய முகாமையாளர் அலுவலத்தில் நேற்று (13) நண்பகல் 12.00 மணியளவில் கற்பூரம் கொழுத்தியும் தேங்காய் உடைத்தும்...
எம்மால் யாழ் பல்கலையில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் சம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையானது ஊடகங்கள் வாயிலாக எமக்கு அறியக்கிடைத்தது. அவ்வறிக்கையில் உண்மைக்கு புறம்பான பல விடயங்கள் உள்ளன. அவற்றை நாம் மறுக்கின்றோம். எமது போராட்டம் தொடர்பில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம். நிர்வாக உத்தியோகத்தர்கள் அவ்விடயங்கள்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை (08.09.2017) தொடக்கம் வேலைப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒன்றியமானது பின்வருவனவற்றை அறிக்கையிட விரும்புகின்றது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட எமது பல்கலைக்கழகமானது இன்றுவரை பல்வேறு நெருக்கடிகளையும் எதிர் கொண்டு இயங்கி வருகின்றது. அண்மையில் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று...
தொண்டைமானாறு அக்கரை பகுதியில், மது பாவனைக்குத் தடை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருப்பினும் இரவு நேரங்களில் மதுவிருந்து தாராளமாக இடம்பெறுவதாக அப்பகுதி மகளிர் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இரவு நேரங்களில், ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வரும் இளஞர்கள் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதால், அப்பகுதியில் வாழும் குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. அக்கரை...
யாழ். சர்வதேச திரைப்பட விழா, தியாகி திலீபனின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதாக அமையக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழா தொடர்பில், குறித்த கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் உரிமைக்காக திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய...
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறிந்து தம்மிடம் ஒப்படைக்குமாறுகோரி அவர்களது உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வீதியில் தொடர்ந்து நடத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆலய வீதியை போராட்டம் நடத்த வழங்க முடியாதுள்ளதாகவும் அதற்கான காரணத்தையும் நிர்வாக சபையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேற்றுக் கடிதம் மூலம் அறிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி...
அச்சுவேலி இராசவீதியில் அமைந்துள்ள நெசவுசாலை கட்டிடத்தினை விடுவிக்குமாறு கோரி அப் பகுதிமக்கள், மதஸ்தலம் ஒன்றிற்கு எதிராக நேற்று(10) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த நெசவு சாலை யுத்தத்தின் பின் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த கட்டிடத்தில் ஒரு மதஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டது பிரார்த்தணை வழிபாடுகள் முண்ணெடுகப்பட்டு வந்துள்ளது. குறித்த் மத ஸ்தலத்தினால்...
கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்திவ் கடன்சுமை என ஆலயப் பூசகரிடம் சென்றவரை செய்வினை அகற்றுவதாக கூறி பூசகர் கொடுத்த மருந்தை அருந்தியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார் குறித்த சம்பவத்தில் ஜெயந்திநகரச் சேர்ந்த ஆதித்தகுமார் வயது-50 என்பரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறி்த்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி ஜெயந்தி நகர்ப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கடன் சுமை என ஆலயப்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தபோதும் இதுவரை குறித்த அதிகாரிகள் இருவர் மீதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும்...
ரயில் பயணத்தின் போது தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.உடரட்ட மெனிக்கே ரயிலில் தமிழ் பெண் ஒருவர் செயற்பட்ட முறையினை தென்னிலங்கை சிங்கள சமூத்தவர்கள் பாராட்டியுள்ளனர். கொழும்பை சேர்ந்த ஒருவர் உடரட்ட மெனிக்கே ரயிலில் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்த ரயிலில் அந்த தமிழ் பெண்...
ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செல்வபுரம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். குறித்த அனுமதியினால் குறித்த பகுதியில் அதிக ஒலி காணப்பட்டது. ஒலிபெருக்கியின் சத்தத்தினை...
‘கொழும்பில் பிளாட் வாங்கு வதற்குப் பணம் தேவையா கவுள்ளது. சீதனத் தொகையை 25 லட்சம் ரூபாவாக அதிகரித்துத் தாருங்கள்’’ என்று மண மகனின் தாயார் மணமகளி டம் கேட்டுள்ளார். அதன் பின்னரே முன்பள்ளி ஆசிரியை உயிரை மாய்த்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியை நேற்றுமுன்தினம் அவரது சகோதரியின் வீட் டின் குளியலறையில் தூக் கில்...
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் சீதன வன்கொடுமையால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் இன்னும் சில நாட்களில் திருமணத்துக்குத் தயாராக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே கேட்ட சீதனத்திற்கு மேலதிகமாகக் கேட்டமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் தந்தையை இழந்த குறித்த பெண்ணின் இந்த...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் உடுத்துறைப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானைத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. மேலும் இந்த தாக்குதலுக்கு இலக்கான இருவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவந்துள்ளது. நேற்று நள்ளிரவு வேளையில் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் இதனை அறிந்த...
டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிச் சுற்றுப்புறத்தை துய்மைப்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையினால் உருவாக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை மாநகரசபையானது இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. அத்துடன் வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை மாநகரசபையானது அகற்றுவதில்லை எனவும் இது தொடர்பாக தாம் வடமாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும்...
புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பங்கதெனியப் பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து இரட்டைத் தலையுடன் கூடிய பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. இந்த பாம்பு ”இரத்த மாம்பிலை”என்று இனங்காணப்பட்டுள்ளதுடன் ஆறு அடி நீளம் உடையது என தெரிவிக்கப்படுகின்றது. பிடிக்கப்பட்ட இந்த இரட்டைத் தலை பாம்பை தெஹிவளை மிருக காட்சிசாலைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொனறாகலையில் கடத்தப்பட்ட இளம் பௌத்த தேரர் ஒருவர், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் வீசியெறிப்பட்டுள்ளார். 17 வயது நிரம்பிய குறித்த பிக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மக்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த தேரர் நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. தேரர் ஆடைகள் எதுவுமின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில்,...
வவுனியா - குருமன்காடு பகுதியில், தந்தை வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த நிலையில் தாயுடன் வசித்த நான்கு வயதுச் சிறுவன், அப்பெண்ணின் இரண்டாவது கணவனால் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளான். இந்தச் சிறுவனைப் பார்க்க அவனது தந்தை, (தனது மனைவியின் முன்னாள் கணவன்) ஞாபகம் வருவதாகக் கூறியே அவன் சிறுவனைத் தாக்கியுள்ளான். தற்போது...
யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் கடனை வசூலிக்க நேற்றிரவு, வாடிக்கையாளரின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில், சாவகச்சேரி , கிராம்புவில் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கடனடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாவை...
Loading posts...
All posts loaded
No more posts