- Saturday
- January 18th, 2025
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த பெரும்பான்மையின பெண்கள் ஐவர் விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக தென்னிலங்கை முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். விசா பெறுவதற்கு அவரது வங்கி கணக்கில் 20 இலட்ச ரூபாய்...
நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாமல் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை 16.10.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 26 வயதுடைய செல்வம் யோகேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, கிராமங்களில் நுண்கடன்நிதி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த ரயிலில் பயணித்த இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலே, இவ்வாறு கொடூரத்தில் முடிவுற்றுள்ளது. ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர் இதுவரை அடையாளம்...
எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழ் மக்கள் யாவரும் இந்துக்களின் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டுமென குறிப்பிட்டு வவுனியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த சுவரொட்டிகளில் சிவசேனா அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவ் அமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொருள் வணிக நிறுவனத்துக்கு விற்பனைக்கு வருமுன், பல கைகள் மாறியே வருகின்றது. அந்தக் கைகளுக்குள்...
காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடொன்றில் 670,000 ரூபா பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அதனுடன் தொடர்புடைய தமிழ் மந்திரவாதி பெண் ஒருவரும் முஸ்லிம் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக...
வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரம் பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்த சம்பவம் வடமராட்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி பகுதியில் குடும்பநிலை காரணமாக நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்று வாராந்தம் அதற்குரிய பணத்தைச் செலுத்தி வந்துள்ளார். அண்மைக் காலத்தில் அவரால் வாராந்தம் குறித்த பணத்தொகையினைச் செலுத்த...
யாழில் தாயை கட்டையால் தாக்கியதுடன், கிணற்றுக்குள் வீசி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்டம் பகுதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய செ.ரத்னாம்பிகை என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் மனநலம் குன்றிய அவருடைய மகனால் ரீப்பையால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட...
கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில், சிறுவர்கள் எவரும் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்துள்ளார். மகாதேவ சைவச் சிறுவர் இல்லத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக சிறுவன் ஒருவனின் தந்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...
புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு...
கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே...
வடக்கு மாகாணத்தில் 182 தொண்டர் ஆசிரியர்களை மட்டும் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கு கொழும்பு கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட அனுமதி தொடர்பில் வடக்கு மாகாண சபை சீராய்வு செய்த பின்னரே அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண...
கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்த ஆண் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த பெண் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில் தகவல்களை பரிமாறுவதாக தெரிவித்து போலி முகநூல் ஒன்றில் ஆண் உத்தியோக்தர் தகவல்களை பதிவேற்றியுள்ளார். அதில் குறித்த பெண், இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில் நிற்கும்...
உலகின் நீளமான திருமணச்சேலை எனும் கின்னஸ் சாதனைப் புரிவதற்காக 250 பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) குறித்த திருமண வைபவம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கின்னஸ் சாதனையை இலக்காக்கொண்டு,...
கண்டியில் நேற்று நடைபெற்ற திருமணம்ஒன்றில் மணப்பெண் உலக சாதனைபடைத்துள்ளார்.மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரிபுடவையை அணிந்து சாதனையை பதிவுசெய்துள்ளார்.. நேற்று முற்பகல் இந்த தம்பதியினர்கன்னொருவ சந்திக்கு வந்த பின்னர்,கின்னஸ் சாதனையை கண்காணிக்கும் குழுமுன்னிலையில் , ஒசரி புடவையின் நீளம்அளவிடப்பட்டுள்ளது. குறித்த புடவை கண்டி கெடம்பே சந்தியில்இருந்து ஈரியகம சந்தி வரை நீளமுடையதுஎன கணக்கிடப்பட்டுள்ளது. பாரவூர்தியொன்றில் கொண்டு...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு போதைப்பொருளை எடுத்துச் சென்ற ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்த பொலிஸார், நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேகநபரிடம் 170 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக...
பாம்புக் கடிக்கு இலக்காகிய ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தன்னைத் தீண்டிய பாம்பை போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு எடுத்துவந்த சில நிமிடத்தில் அந்தப் பாம்பு போத்தலுக்குள் 10 குட்டிகளைப் போட்டதால் வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் காரைநகரில் நேற்று முன்தினம் ஒருவருக்குப் பாம்பு தீண்டியுள்ளது அவர் சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம்...
யாழ்.நகர்ப் பகுதியில் உள்ள சில கரையூர் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் மலத்தொற்று கிருமி கலந்துள்ளதால் 100 இற்கு மேற்பட்ட கிணறுகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈகோலி என்னும் மலத்தொற்று கிருமி கிணறுகளில் கலந்துள்ளதாக யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குருநகர் பாசையூர் கொட்டடி நாவாந்துறை போன்ற கரையூர் பிரதேச மக்கள் குடிதண்ணீர்...
தமிழ்மக்களின் விடிவிற்காய் உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக்கொண்ட தியாகி திலீபனின் நினைவுதினம் நேற்று (15-09-2017) அவர் உயிர்நீத்த இடமான நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இடம்பெறும் அதே நேரத்தில் தூபிக்கு முன்னதாக நிதிநிறுவனமொன்று இந்த நிகழ்வை குழப்பும் வகையில் பாரிய சத்தத்துடன் பாடல்களையும் இசையையும் ஒலிபரப்பி இடையூறு விளைவித்துள்ளது....
பெண்ணொருவர், தனது நான்கு வயது மகளுக்கு பிரிட்டோன் மருந்துக்கு பதிலாக வேறொரு மருந்தை மாற்றிக்கொடுத்ததால், அச்சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் கட்டைப்பரிச்சானை சேர்ந்த சிவகாந்தன் பிறெஸமி (வயது 4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமிக்கு தடிமல் ஏற்பட்டமையால், அவரது தாய், பிரிட்டோன் மருந்தை பருகக் கொடுத்துள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts