- Saturday
- January 18th, 2025
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிவில் உடைதரித்த தமிழ் மொழி பேசும் பொலிஸாரால், இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கைத்துப்பாக்கி காண்பித்து பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று மணி நேரத்தத்துக்குப் பின்னர் மீள கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் யாழ், ஐந்து சந்திப் பகுதியில், கடந்த சனிக்கிழமை (23) பகல் இடம்பெற்றுள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர் கருத்துத்...
சில வைத்தியர்கள் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக பார்க்கின்றனர் அவர்கள் சட்டத்தில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி அதில் இருந்து தப்பி கொள்வதற்காக மனிதாபிமானத்திற்கு எதிராக கூட செயற்படுகின்றார்கள் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா. குணசீலன் கவலை தெரிவித்துள்ளார். யாழ்.நொதேர்ன் தனியார் வைத்திய சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி கண்புரை நீக்கி...
வவுனியா ஓமந்தை கல்லுப்போட்டகுளத்தில் மாணவி ஒருவர், ஆசிரியர் ஒருவரால் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதை கண்டித்தும்,அதற்கான நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரசே மக்களால் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 29 ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர், கர்ப்பமடைந்துள்ளமை உறுதியானது. இதனையடுத்து ஓமந்தை பொலிஸார்...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கனகபுரம் துயிலும்...
யாழ். நகரை அண்டிய பகுதியில் சுவாரஸ்யமான முறையில் பேருந்தைத் திருடி சென்ற நபரால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வழமை போன்று சேவையில் ஈடுபட்டு யாழ்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்திருந்தது. பயணிகளை யாழ்.நகரில்...
யாழ். போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளந்தாய் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் காணப்படுவதாகத் தெரிவித்து அவரது கணவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அச்சுவேலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய குருபரன் பிரசாந்தி என்ற இளந்தாயே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரது கணவன் தெரிவித்தபோது, ‘இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 12 ஆம்...
காலாவதியான மருந்துப் பொருள்கள், ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன்கள், ஊசிவகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கடந்த மூன்று நாள்களாக வடமராட்சி தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்குகின்றன. இவை ஆபத்தான மருத்துவக் கழிவுகளா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்தப் பொருள்கள் இந்தியாவிலிருந்தே இங்கு வருகின்றன என சுகாதாரப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். பொருள்களில் உள்ள இந்திய...
அதிபராக கடமையாற்றும் தனது கணவன் சில நாள்களாக வீட்டுக்கு வராத காரணத்தால் அவரை பாடசாலைக்குத் தேடிச்சென்று மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த முற்பட்ட பெண்ணால் யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் பதற்றம் ஏற்பட்டது. யாழ் மாநகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் அதிபர் ஒருவர் கடந்த விடுமுறை தினங்களான மூன்று நாள்களும், தனது வீட்டுக்கு செல்லாமல்...
ஆடைகளை உலர்த்த உழவு இயந்திரத்திற்கு அருகில் சென்ற பெண் ஒருவர், உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. புத்தூர் பகுதியினை சேர்ந்த 58வயதுடைய பெண்னொருவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். மழையில் நனைந்திருந்த வெங்காய பிடிகளை உலர்த்துவதற்காக உழவு இயந்திரத்தினை இயக்கி அதனூடாக காற்றாடியினை இணைத்து வெங்காயத்தினை...
யாழ். சாவகச்சேரியில், இடம்பெற்ற சட்ட விரோதமான பிரமிட் வியாபாரம் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வில், நிறுவன முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அரசால் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறையிலான வியாபார முறை மூலம் ஏமாற்றப்பட்ட மக்கள், ஏமாற்றிய பணத்தை திருப்பி வழங்குமாறும் இந்நிகழ்வின் போது எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை அடிபணியும் வகையில்...
பனை மற்றும் தென்னையிலிருந்து கள்ளை சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த மதுவரி திணைக்கள கட்டளைச்சட்டத்தின் 15 ஆவது பிரிவில் (பாகம் 52) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய தென்னை, பனை மரங்களிலிருந்து கள்ளை எடுப்பதற்கு மதுவரி திணைக்களத்தின் அல்லது உரிய பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அனுமதிப்பத்திரம் பெறுவது...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் இன்று மாலை 4.00 மணிக்கு முன்னதாக விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது....
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க நிர்வாகம் முடிவு செய்தமைக்கு சிங்கள மாணவர்களின் நடவடிக்கையே காரணமென நம்பகமான தகவல் தெரிவித்தது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், கடந்த செப்ரெம்பர் 25ஆம் திகதியிலிருந்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமக்கு எதிரான வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல்...
வடமாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே மொத்தமாக தற்கொலை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தை உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தின் பின்னால் மிகப்பெரிய துரோகத்தனம் உள்ளதாக அவர்களது குடும்ப உறவினர்கள் சொல்லியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கணவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்து நேற்றய தினம் மனைவி தனது மூன்று மகள்களுடன் நஞ்சினை அருந்தி...
கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம் மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கின்ற போது தொடர்ந்தும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதி மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களிற்கு மாலை நேர வகுப்புக்களுக்கு சென்று வருகின்ற நிலையில், இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் ஆகிய பகதிகளிலும் வன்னேரிக்குளம் ஸ்கந்தபுரம்,...
கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவீடு தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, நில அளவீட்டின் போது, காணிகளை அடையாளப்படுத்துவதற்காக பொதுமக்கள் சிலரையும் அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். எனினும், தமக்குத் தெரியாமல் தற்போது இரணைதீவில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச் செயற்பாடானது, தமது பூர்வீக பகுதியில் அடையாளம்...
யாழ். திருநெல்வேலியிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டபோது, கண்ணில் கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில், ஐந்து பேரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை கண்புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள் ஒன்பது பேர், கிருமித் தொற்று...
யாழில். உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஒன்பது பேர் கண்ணில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். யாழில்.உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கடந்த சனிக்கிழமை காலை கண்ணில் ” கற்ராக் ” சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது ஏற்பட்ட கிருமி தொற்றினால் அன்றைய தினம் கண்ணில் சத்திர...
யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு கிணற்றுக்குள் தள்ளி படுகொலை செய்ய முயற்சித்த கணவனை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரந்தனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு (வியாழக்கிழமை) மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட கணவன் ,...
Loading posts...
All posts loaded
No more posts