- Monday
- March 3rd, 2025

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள அவசர விபத்துச் சிகிச்சைப் பிரிவுக்கு நியமிக்கப்படும் சிற்றூழியர்களில் 60 சதவீதமானோர் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவசர விபத்துப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி திறக்கப்படவிருந்த நிலையில், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகைதரும்போது அதனைத் திறப்பதற்கு...

குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களை கவனத்தில் எடுத்து இயற்கை நீதியின் பிரகாரம் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கைதிக்கு தண்டனைத் தணிப்பு வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்தார். இலங்கை நீதித்துறை வரலாற்றில் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த கைதி ஒருவருக்கு அதனை இயற்கை நீதியின் பிரகாரம் அதே நீதிமன்று தண்டனைத்...

சிறுமியைக் கடத்த முயற்சித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய ஒருவர் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார். தப்பிச் சென்றுள்ளவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு...

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர் என போலி அடையாள அட்டையைத் தயாரித்து பணியாற்றிவந்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு தொடர்பில் பலமுறை முறைப்பாடு செய்தும் நடவடிக்கை...

யாழில் உள்ள அதிகாரம் மிக்க அரச அலுவலகம் ஒன்றில் சீற்றூழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உத்தியோகஸ்தர்கள் மூவரை வெய்யிலில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மேலிடத்திற்கு முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், குறித்த அதிகாரம் மிக்க அலுவலகத்தில் பணிபுரியும் 3 பெண்...

விடுதலைப் புலிகளின் கரும்புலி படையணியின் கறுமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறவே இவர்கள் நாடகமாடியிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் ஒன்றை...

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உள்ளிட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தின் பெயரை சப்புமல்கஸ்கந்த எனப் பெயரை மாற்றி சிங்களக் குடியேற்றத்தினை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கச்சல் சமனங்குளம் தமிழர்களின் பூர்வீக கிராமமாக காணப்பட்டதுடன் அங்குள்ள...

காணித் தகராறு ஒன்று கைகலப்பாக மாறியதில் அரச உத்தியோகத்தர்கள் இருவரின் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் சிகிச்சை பயனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாழில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் வடக்கு எழுதுமாட்டுவாளைச் சேர்ந்த செல்லன் சின்னத்துரை (வயது-78) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். அதே இடத்தில் காணித்தகராறு கைகலப்பாக மாறியதில்...

யாழ்ப்பாணம் நகரில் உள்ள உணவகத்தில் வாங்கிய மதிய உணவுப் பொதியில் மட்டத்தேள் காணப்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வழமை போன்று நேற்று(25) மதிய உணவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பின்னர் தான் வேலை செய்யும் வங்கிக்கு சென்று...

வடமாகாண கல்வித்துறையில் மர்மங்கள் நீடிக்கின்றன. பணிப்பாளர்கள் இல்லை!! அதிபர்கள் இல்லை!! ஆசிரியர்கள் இல்லை!! இதுவே இன்றைய வடமாகாண கல்வியின் நிலை என்று கவலை வெளியிட்டுள்ளது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதானமான யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் வெற்றிடம் ஒரு வருடத்தை...

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு அமைக்க வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் விநியோகத்தின்போது லஞ்சம் பெற்ற பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் பெண் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் கையும்களவுமாக கைது செய்யப்பட்டார். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] பூநகரிப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தான பெண் உத்தியோகத்தர்...

வவுனியா – ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அதிபர் கெ.தனபாலசிங்கம், கொழும்பிலுள்ள மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்படி, அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம்...

கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குள் தஞ்சமடைந்த மனைவியின் தந்தை மீது அங்கு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை பாதுகாக்கும் வகையில் அவரைத் தப்பிக்கவிட்ட பொலிஸாரின் நடவடிக்கை இடம்பெற்றது. எனினும் அது தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு முறைப்பாட்டாளரின் உறவினர்கள் கொண்டு சென்றதை அடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தனர். தாக்குதலாளியின் வீடு கோப்பாய் பொலிஸ்...

கடந்த வருடம் கிடைத்த 12 மில்லியன் ரூபா பணத்தை, செலவிடாமல், பத்திரமாக பாதுகாத்து திருப்பி அனுப்பியுள்ளது யாழ்ப்பாணம் மாநகரசபை. யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முத்திரைவரிப்பணம் கிடைக்காத காரணத்தால், அதற்கு பதிலாக மாகாண ஒதுக்கீட்டின ஊடாக 65 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இந்த பணத்தில் 27 வட்டாரங்களிற்கும் 1.5 மில்லியன் ரூபா வீதம்...

மது போதையில் பெனாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த சனிக்கிழமை இரவு யாழ்.நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளனர்....

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன் நடந்து வரும் படத்தை பிரசுரித்து ‘ இரவு இரண்டு மணிக்கு...

சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம் தடுத்துவைத்திருந்துவிட்டு விடுவித்தனர் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர்...

யாழ்.மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் மாநகசபை வளாகத்தில் மாநகரச்...

இரணைமடு குளம் புனரமைப்பு செய்யப்பட்டதில் பாரிய ஊழல்கள் மோசடிகள் நடைபெற்று உள்ளது எனவும் , அதனால் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஈ. பி.டி.பி கோாியுள்ளது. இது குறித்து இன்று ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போது, அக்கட்சியின் செயலாளா் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் வடமாகாணசபை எதிா்க்கட்சி...

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த...

All posts loaded
No more posts