- Saturday
- March 1st, 2025

மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் உடுவில் கடவுள் சந்திதியில் வசிக்கும் 74 வயதுடைய திருமதி ஐயாத்துரை என்ற வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும்...

வடக்கில் கடுமையான வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வரட்சியுடன் காலநிலை காரணமாக பெரும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குளங்களில் நீர்மட்டங்கள் குறைந்து வருகின்றது. வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து மிதக்கும் காட்சி பார்க்கும் மக்களை பெரும் பதைபதைக்கு...

சிட்டிசன் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் அந்த திரைப்படத்தில் அத்திப்பெட்டி என்று ஒரு கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போனது போலான ஒரு சம்பவம் இங்கும் அதுவும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. யாழ்.மாநகர சபை வீதிகளின் பதிவேடுகளின் பிரகாரம் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான வீதி ஒன்று காணமல் போய் உள்ளது. ஜிம்மா...

வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள கல்லூரியொன்றின் அதிபர் ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிபர் நேற்றையதினம் ஆசிரியை ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த ஆசிரியையை பேசியுள்ளார். இதன் காரணமாக அதிபரின் இவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தை...

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உள்பட ஐவரை மோதித் தள்ளிய முச்சக்கர வண்டிச் சாரதி, வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றார். மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உள்பட மூவர் வீதியின் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டனர். அதனால் மாணவர்கள்...

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபை பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. கிறிஸ்தவ சபையினர் தனது மகளை பார்க்கவிடாமல் ஐந்து வருடங்களாக உள்ளே வைத்துள்ளதாக தெரிவித்தும் தனது மகளை மீட்டுத்தருமாறு கோரியும் தாய் ஒருவர் குறித்த சபைக்கு முன்பாக போராட்டம் நடாத்தினார். இதன்போது குறித்த தாயை...

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் உள்ள இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் 2016 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியில் பூசை செய்த அர்ச்சகர் ஒரு முஸ்லிம் இனத்தவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2016 – 2017 காலப்பகுதியில் மருதனார்மடம் இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் பிரதீப சர்மா என்ற பெயரில் பூஜை செய்தவர் கெக்கிராவையைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் முகமட்...

அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர். யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலும் , தீவக பகுதியில் உள்ள அரச வங்கி கிளையிலும்...

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் மாணவன் ஒருவன், இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த மாணவனும் அவனது...

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அனைத்து சமூக மக்களிற்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஜன இயக்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த போராட்டத்தில், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமாரும் கலந்து கொண்டு, தமது ஆதரவை தெரிவித்துள்ளார். ஆலயத்தின் திருவிழாவில் ஒரு...

கடந்த வாரம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற இன வன்முறையின் போது 14 முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்கள பெண்ணொருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தை சேர்ந்த சுஜீவன சந்திமான என்ற பெண்ணே இந்த வீரச் செயலை செய்துள்ளார். கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தில் 500க்கு அதிகமான...

இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளவர்களை வடக்கில் தங்க வைப்பதற்கு தமிழ் அரசு கட்சியின் சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் சம்மதம் வெளியிட்டிருந்தனர். எனினும், பிரதேச அளவில் இருக்கின்ற அரசியல்வாதிகளே அரசியல் நோக்கங்களுக்காக எதிர்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன். யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நேற்று நடத்திய...

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று (22) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் 50 பேர் வரை...

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சமூகப் பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவிலில் கடந்த வருடம்...

மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த தந்தை ஒருவர் கைக்குண்டுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மன்னார் பெரியபண்டிவிருச்சான் பகுதியில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்குடும்பத்திலுள்ள தந்தை மகனுக்கு இடையே வாய்த்தர்க்கம்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு கதறி அழுத நிகழ்வு நேற்று...

நான்கு மாதக் குழந்தை ஒன்றுக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை விட வேறு மாத்திரைகளை மருத்துவர் மாற்றிக் கொடுத்துள்ளார். எனினும் பெற்றோரின் கவனத்தால் குழந்தை உயிர் தப்பியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்துள்ளது. கிளினிக் சிகிச்சைக்குச் சென்ற 4 மாதக் குழந்தை ஒன்றுக்கு விற்றமின் மாத்திரைக்குப் பதிலாக குருதி அழுத்த நோய்க்கு உபயோகிக்கும்...

வடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று (வெள்ளிக்கிழமை) உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக்கொண்டிருந்ததை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார், குறித்த உரப்பையினை சோதனையிட்டபோது, அதனுள்...

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பாதுகாப்பு படையினர் கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றிருந்தவேளை அந்தச் சம்பவம் இடம்பெற்றது. அவ்வேளை கதவை திறந்தவர் பாத்திமா இப்ராஹிம். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான இலாம் இப்ராஹிமின் மனைவி- கர்ப்பிணி. பொலிஸாரைப் பார்த்ததும் அவர் வீட்டிற்குள் ஓடிவெடிகுண்டை வெடிக்க செய்தார்.அவருடன் சேர்ந்த அவரது மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர்....

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகவும் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று...

All posts loaded
No more posts