நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க விரும்பும் அதிபர்கள் தங்கள் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் அதற்கான முன் அனுமதி பெற்று அதனைச் செயற்படுத்த முடியுமென வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (11) காலை 7 மணிக்கு நல்லூர் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய...

யாழ். நல்லூர் தேர், தீர்த்தத்தின் போது குற்றங்கள் புரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை! நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களின்போது, கலாசாரச் சீரழிவு குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றம் புரிபவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல், கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று எச்சரிக்கை செய்துள்ளார். போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேல்...
Ad Widget

33 வருடங்களுக்குப் பின்னர் முல்லை குருந்தூர் மலை ஆலயத்தில் வழிபாடு

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப்பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் அமைந்திருக்கும் வைரவர் ஆலயத்தில் 33 வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் சனிக்கிழமை (29.08.2015) வழிபாடு இடம்பெற்றுள்ளது. ஊரவர்களால் 'ஜயன்' என்று அழைக்கப்படும் இந்த வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விசேட மடைப்பொங்கல் நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் க. சிவநேசன் ஆகியோரும்...

நல்லூரானின் அதிசயம் !! திருட்டுப்போன ஓட்டோ திரும்ப வந்தது!!

நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்திற்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வருகை தந்து ஆலயப் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டி திருட்டுப் போயிருந்தது. இது தொடர்பில் முச்சக்கர வண்டி உரிமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.8.2015) அதே இடத்தில் கொண்டு...

நல்லூர் உற்சவம்: 300 கடைகள் அமைக்க அனுமதி

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழாவின் போது ஆலயச் சூழலைச் சுற்றிலும் சுமார் 300 கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கவுள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 25 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. மஹோற்சவ காலத்தில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான...

நல்லூர் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 19 ஆம்திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன், ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு கந்தன் ஆலய வெளிவீதியைச் சுற்றி விளம்பரப் பலகைகள், அரசியல் பதாகைகள் என்பன காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்டு சிவனையும் சக்தியையும் குறிக்கும் சிவப்பு வெள்ளை நிறத்துணிகள் கட்டப்பட்டுள்ளன. இம்முறை ஆலய சூழலில் நடைபாதை வியாபாரங்கள் முற்றாக...

நல்லூர் கந்தன் திருவழா ஏற்பாடுகள் சூடுபிடிப்பு

எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலயத்துக்குள் நுழையும் நாற்பக்க வீதிகளிலும் பக்தர்கள் இளைப்பாறும் கொட்டகைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலயத்தில் சுவாமி வீதியுலா வருகையில் விளம்பரப் பதாகைகள் பார்வைக்குத் தென்படாத வகையில் ஆலய வெளிவீதி வளாகத்தைச் சுற்றி ஆலய நிர்வாகத்தால் மறைப்புக்...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய ஆடிக்கார்த்திகை பெருவிழா!

மாவிட்டபுரம் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் ஆடிக் கார்த்திகை பெருவிழா இன்று (08) சனிக்கிழமை அதிகாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளது. உசத் கால பூசையுடன் ஆரம்பமாகி இரவு 09 மணிவரை இப்பூசை நிகழ்வு நடைபெறவுள்ளது. அவ்வகையில், காலை 07 மணிக்கு ஸ்நபனாபிஷேகமும் விசேட மேளக்கச்சேரியும் நடைபெற்று, 08 மணிக்கு காலை சந்திப்பூசை விசேட மேளக் கச்சேரியும் 08.30...

அழிவடையும் நிலையில் கீரிமலைக் கேணி!

இந்து மக்களின் வரலாற்றுப் மகிமை வாய்ந்த கீரிமலைக் கேணி அழிவடையும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை உடனடியாக திருத்தி அதனுடைய வரலாற்றையும் மற்றும் இந்து கலாசார மரபுகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தேவையும் தற்போது எழுந்துள்ளது. சுனாமி அனர்த்தத்தினால் கீரிமலைக் கேணியும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த வேளையில் கேணியின் சுவர்கள் உடைந்து சேதமடைந்ததுடன் கேணியின்...

நல்லூர் உற்சவ காலத்தில் பண்பாட்டுடைகளுடன் வாருங்கள்

நல்லூர் உற்சவ காலத்தில் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தருபவர்கள் இறுக்கமான ஆடைகளை அணியாது பண்பாட்டுடைகளுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நல்லூர் உற்சவ காலத்தில் பல்இனத்தவர்களும் வருகை தருவது மட்டுமல்லாது நல்லூரின் புனிதத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டியதொன்று.ஆகவே இங்கு வருகை தருபவர்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து வருவதால் நல்லூரின் புனிதத்தன்மைக்கு களங்கம் ஏற்படுகின்றன. எனவே கடந்த முறையும்...

அருள்மிகு மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா!

அருள்மிகு மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய காம்யோற்சவப் பெருவிழா. இன்று 21.07.2015 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 14.08.2015 வெள்ளிக்கிழமை ஆடி அமாவாசைத் தீர்த்தத்துடன் 25 நாட்கள் திருவிழா நிறைவுபெறும். திருவிழாக் கால முக்கிய நிகழ்வு 08.08.2015 சனிக்கிழமை திருக்கார்த்திகை 12.08.2015 புதன்கிழமை சப்பறம் 13.08.2015 வியாழக்கிழமை தேர் திருவிழா-காலை 8.45மணி வசந்த மண்டப பூசை...

யாழில் புனித ரமழானை முன்னிட்டு சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற முஸ்லிம்கள்

புனித நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை நிகழ்வில் பங்கேற்ற முகமதியா ஜும்மா பள்ளிவாசல் பிரதான இமாம் எம்.ஐ மஹமூட் பலாஹி விசேட சொற்பொழிவை ஆற்றினார். இதன்போது பெருந்திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

வேள்வியை நிறுத்த 90 வீதமான ஆலயங்கள் சம்மதம்!!

மிருக பலியிடலை நிறுத்துவதற்கு 90 வீதமான ஆலயங்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மிருக பலியிடல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் 25க்கும் மேற்பட்ட ஆலயங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதே கலந்துகொண்ட ஆலயங்களில் 90 வீதமானவை...

நாளை முதல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா ஆரம்பம்

ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா நாளைய 17.06.2015 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது. 29.06.2015 திங்கட்கிழமை சப்பறம் 30.06.2015 செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா 01.07.2015 புதன்கிழமை தீா்த்தத் திருவிழா 02.07.2015 வியாழக்கிழமை கொடி இறக்கம் மற்றும் தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகின்றது. திருவிழாக் காலங்களில் தினமும் மாலை கோவில் முன் கலையரங்கில் கலை...

கடாக்கள், சேவல்கள் வெட்டப்பட்டு துர்க்காபுரம் பேரம்பல வைரவருக்கு வேள்வி!

தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் இன்று மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது. அதிகாலையில் இடம்பெற்ற பொங்கல்கள் படையல்கள் மற்றும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்விக்கு கடாக்கள் பலியிடும் நிகழ்வுகள் இடம்பெற்றன. தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் கடாக்களை பரிசோதனை செய்து அனுமதி...

வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் இன்று வழிபாடு!

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய வைகாசி விசாக மடை வழிப்பாட்டுக்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். நீண்ட காலத்துக்கு பின்னர் இராணுவ அனுமதி கிடைத்தமையால் பெருமளவான மக்கள் ஆலயத்துக்கு செல்வதற்காக வயாவிளான் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கூடினர். இதன்போது உயர் பாதுகாப்பு வலய எல்லையில் பதிவுகளை மேற்கொண்டே மக்கள் உட்செல்ல...

கடல் தீர்த்தத்தில் எரியும் விளக்கு: காண காட்டா விநாயகர் ஆலயத்தில் பக்தர் கூட்டம்!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சிலாவத்தை, தீர்த்தக்கரைக் கடலில் கடல் நீரில் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு முள்ளியவளை, காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் மண்டபத்தில் விளக்கேற்றப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வை பெருமளவான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்து வருகின்றனர்.

பிரான் பற்று காளி அம்மன் கோவிலில் வருடாந்த வேள்வி

வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளிஅம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போது சுகாதார விதிமுறைகள், சட்டதிட்டங்களுக்கு அமைவாக சம்பந்தப்பட்டோர் முன்னிலையில் ஆலய வீதியில் இதற்கென அமைக்கப்பட்ட கொல்களத்தில் 113 ஆடுகள் பலியிடப்பட்டன. சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கடாக்களை வெட்டும் மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதேபோன்று வெட்டப்படும் கடாக்களும்...

இன்று பெரிய வியாழன்

யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் கல்வாரித் திருவிழா புனித வார நிகழ்வுகளாகப் பெரிய வியாழன்,பெரிய வெள்ளி, பெரிய சனி,உயிர்ப்பு ஞாயிறு,தியான திருச்சிலுவை வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இன்று பெரிய வியாழக்கிழமை மாலை 5மணிக்கு திருப்பலி, பாதம் கழுவுதல்,தேவ நற்கருணைப் பவனி, எழுந்தேற்றம் என்பன நிகழவுள்ளன. நாளை பெரிய வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு வார்த்தை வழிபாடு,திருச்சிலுவைஆராதனை என்பன...

கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து ஆலயத்துக்கு வருவதற்காக இதுவரையில் 6,200 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அவரிடம்...
Loading posts...

All posts loaded

No more posts