- Wednesday
- January 22nd, 2025
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி வருகிறது. அதற்கு முன்னதாக வரும் 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக(விரதம்) கடைபிடித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் புதன்கிழமை அன்று...
60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்த உற்சவம் நேற்று அதிகாலை தொடக்கம் மாலை வரை தொண்டைமானாறு வரையான பாக்குநீரிணை வங்காள விரிகுடா கடலில் இடம்பெற்றது. வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து சுவாமி எழுந்தருளி கடலில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது. சிம்மராசியில் குரு பகவானும் நிற்க,...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன், திருப்பலி ஆரம்பமாகின்றது. 21ம் திகதி காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத்...
பலாலி கன்னார் வயல் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் தின விழாவில் பங்கேற்கவுள்ள மக்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவிலும் இந்துக் கோயில்கள் மற்றும் மீள்குடியேற்ற சபையும் அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் விழா பலாலி கன்னார் வயல் ஸ்ரீ...
இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 'கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வழிபாட்டுக்கு உரியவை அல்ல' என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய...
திருவெம்பாவை திருப்பூஜை இன்று (17) அதிகாலை ஆரம்பமாகிறது.தட்சிணாயத்தின் இறுதி மாதமான மார்கழி மாதத்து வளர்பிறை ஆறாம் நாள் இத்திருவெம்பாவை பூஜை ஆரம்பமாகிறது. இன்று தொடக்கம் தொடர்ந்து 10 நாட்களுக்கு சிவாலயங்களில் அதிகாலையில் பக்திப்பூர்வமாக திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெறுவதுடன் திருவெம்பா பாடி சிவனை வணங்குகின்றனர்.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு வருகின்ற காதல் ஜோடிகள், ஆலய வளாகத்தில் உலாவித் திரிவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாக சபையால், இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது, ஆலயத்துக்கு வரும், காதல் ஜோடிகள் தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்ல வேண்டும். அதனை விடுத்து ஆலய வளாகங்களில் அமர்ந்து பொழுதைப் போக்கக்கூடாது. புனிதமான இந்தப்...
உலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம் பொருளும் ஓங்காரத்தின் உட்பொருளுமான விநாயகப் பெருமானுடைய பெருங்கதை விரதம் இன்று (26) முதல் ஆரம்பமாகின்றது. விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும்...
நயினாதீவில் முன்னொரு காலத்தில் இருந்த ரஜமகா விகாரை வளாகத்தில் மீண்டும் விகாரை அமைக்கப்பட்டு, கலசங்கள் மற்றும் ஆசனங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. நயினாதீவில், நாக விகாரை என்னும் விகாரையொன்று துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த விகாரைக்கு சான்றாக அமையும் பழைய விகாரையானது, நயினாதீவு 1ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றிருந்தது. இந்நிலையில் பழைய இடத்திலும் ஒரு விகாரையை அமைக்கும்...
தமிழ் அரசியல் கைதிகளை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் தீபாவளி தொடர்பான நிகழ்வுகளில் சுயகௌரவமுடைய எந்தவொரு இந்து மகனும் கலந்து கொள்ளமாட்டான் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், பொதுச் செ லாளர் பொ.கதிர்காமநாதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த...
யாழ். மறை மாவட்டத்தின் 8 ஆவது ஆயராக அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு நேற்று வத்திக்கானில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து யாழ். ஆயர் இல்லத்தில் வைத்து இந்த அறிவிப்பை இளைப்பாறிச் செல்லும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். தனது குருத்துவ வாழ்வில் 25...
இந்துக்கள் சக்தியை போற்றி வணங்கும் புனித விரதமான நவராத்திரி விரதம் இன்று (13) ஆரம்பமாகிறது. புரட்டாதி மாதம் பிரதமை திதியில் ஆரம்பமாகும் இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. நவராத்திரி விரதத்தின் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கை அம்மனுக்கும் அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி லஷ்மி அம்மனுக்கும்...
சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (26) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இன்று காலை 08.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை ஆரம்பமாகி நடைபெற்று அதன் பின்னர் சுவாமி காலை 10 மணியளவில் தேருக்கு எழுந்தருளவுள்ளார். இதனைத் தொடர்ந்து சுவாமியின் தேர் ஆரோகணம் காலை 10. 30 மணிக்கு...
யாழ் முற்றவெளி அரங்கில் காலையில் ஒன்று கூடிய முஸ்லீம் மக்கள் தமது ஹஜ் பெருநாளின் விசேட தொழுகையை மேற்கொண்டதுடன் தமது உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா். ஹஜ் பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டியும் பிரார்த்திக் கொண்டனா். ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை...
மன்மத வருடத்தின் புரட்டாசி சனி விரதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 5 சனிக்கிழமைகளுக்கு விரதம் நிகழவுள்ளது. சைவ சமயத்தவர்களுக்கு மிக முக்கியமான இவ்விரதத்தில் ஜாதகத்தில் சனி பகவான் கூடாத இடங்களில் தங்கியிருக்கப் பெற்றவர்கள் இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து, எள்ளெரித்து, நீலப்பட்டாடை சாத்தி, நீல நிறப் பூவால் அர்ச்சனை செய்து விமோசனம் பெற்றுக்கொள்ளலாம்.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தற்போது தளர்வு நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் நீண்டகாலப் புனரமைப்பின் பின் கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயத்தில் குறித்த ஆலய தர்மகத்தா குழுவினரால் ஆலயத்திற்குள் வழபடச்செல்லும் ஆண்கள் ஷேட் அணியாமல் வேட்டியுடனும் பெண்கள் பஞ்சாபி முதலிய ஏனைய ஆடைகள் தவிர்த்து சேலையுடனும் வரவேண்டும் என்ற சட்டம்விதிக்கப்பட்டதால் அடியவர்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு...
நல்லூர் உற்சவ காலத்தில் கடைகளுக்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டதின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். மாநகர சபை கணக்காளர் தெரிவித்தார். நல்லூர் உற்சவ காலத்தின் போது, ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் கடைகள் அமைப்பதற்கான இடம், யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஏலத்தில் வாடகைக்கு விடப்பட்டது. இதில் அதிகூடிய ஏலம்...
சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் இடம்பெறும் இம் மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா 25 ஆம் திகதி வௌ்ளிக்கிழமையும் தேர்த்திருவிழா 26 ஆம் திகதி சனிக்கிழமையும், சமுத்திரத் தீர்த்திருவிழா 27...
நல்லைக் கந்தன் என்று அழைக்கப்படும் நல்லூர் முருகனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை 7மணிக்கு இடம்பெற்றது. நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன. ஆலயத்தின் திருவிழாவிற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வெள்ளம் அலைமோதும் என்பதனால் ஆலயச் சூழலில் பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில்...
Loading posts...
All posts loaded
No more posts