- Sunday
- February 23rd, 2025

இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. மகா சிவராத்திரி தினமான நாளை 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழில் மாபெரும் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. “சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது அறிவியலே! ஆன்மீகமே! எனும் தொனிப்பொருளில் இந்த பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. கீரிமலை – நகுலேஸ்வரம் ஆலயத்தில்...

தமிழ்நாடு சிதம்பரம் கோயில் திருவாதிரை உற்சவத்திற்கு வடக்கில் இருந்து செல்லும் பயணிகளுக்கான பதிவுகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றன. அதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் பயணிகள் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியுமென்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. சிதம்பரத்திற்கு செல்லும் பயணிகள், வடமாகாண ஆளுநர் அலுவலத்தில் உள்ள இந்து கலாசார திணைக்களப் பிரிவில்...

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அதிகாரத்துக்குட்பட்ட எல்லைகளில் உள்ள ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்விநடத்த முற்றாகத் தடைசெய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று கட்டளையிட்டார். குடாநாட்டு ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்ளி நடத்துவதற்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனு இந்து மகா சபையால் முன்வைக்கப்பட்டது. அதனை சட்டத்தரணி வி.மணிவண்ணன்...

நவராத்திரி ஆரம்பம் தொடர்பாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வருட நவராத்திரி விரதம் ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்பவை முறையே 20.09.2017 புதன் கிழமை மற்றும் 21.09.2017 வியாழக்கிழமை என இரு வேறு தினங்களை குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்து...

உலகலாவிய முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசட பெருநாள் தொழுகைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹஜ் பெருநாள் சமத்துவத்தின் அடிபடையிலான உயரிய சமூக நீதிக்கு...

யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தினர் நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 28 ஆம் முதல், 25 நாட்களுக்கு இடம்பெற்றது. இதற்மைய நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பாதுகாப்பு கடமையில் 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். இந்த...

வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடும் மழை பெய்து வருவதால் மடு அன்னையின் திருவிழாவை வழக்கமான முறையில் கொண்டாட முடியாதவாறு தடைப்பட்டுள்ளது. நாட்டின் நாலாபுறமும் இருந்து வந்த யாத்திரீகர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மடு திருத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் யாத்திரீகர்கள் தற்காலிகமாக அமைந்து தங்கியிருந்த கூடாரங்கள் அனைத்தும் வெள்ள...

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி...

கிளிநொச்சியில் மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூஜை ஒன்றும் ஆயிரத்து எட்டு இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட குறைந்தளவு ஏக்கர் சிறுபோக நெற்செய்கையில் கூட, மழை இன்மையால் குளத்தில் இருந்த மிகக்குறைந்த அளவு நீர் மட்டமும் குறைந்து செல்வதனால் நெற்பயிர்கள் அழிவடைந்து கொண்டுள்ளது....

மடு திருத்தலத்தில் தங்கியிருந்த யாத்திரிகர்களுக்கிடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் கலாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில யாத்திரிகர்களுக்கிடையிலேயே மேற்படி மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன், மோதல் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரிடம் கலாவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைபேசி இலக்கத்தை பலவந்தமாக...

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 அளவில் தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் யோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா...

நயினாதீவு ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பாதுகாப்பு சேவை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்களவாடி ஞானவைரவர் சனசமூக நிலையத்தினரால், இந்தக் கடற்பயணிகள் பாதுகாப்பு சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். இதற்காக 60க்கும் அதிகமான தொண்டர்களும் நீச்சல்வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 5 படகுகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார். உயிரை பணயம் வைத்து...

வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்றுத் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது. வருடாந்த பொங்கல் உற்சவம் வழமைபோன்று இம்முறையும் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வருகைதரும் பக்தர்களுக்குரிய போக்குவரத்துச்சேவைகள் உரிய முறையில் ஒழுங்குபடுத்த ப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன....

நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றுக்காக தாதுகோபத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் அடிக்கல் நாட்டியுள்ளனர். தென்மராட்சி நாவற்குழியில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தெற்கில் இருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட சிங்களமக்கள் அரசகாணிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் வழிபாட்டுக்காக பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு விகாரைக்கான தாதுகோபத்தை அமைப்பதற்கு கடந்தவாரம் அடிக்கல்...

உலகில் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக புதன்கிழமை(10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது. இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார்....

கவுனவத்தை வயிரவர் கோவில், வேள்வி உற்சவத்தில் மிருக பலியிடலுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தடையை நீடித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றய தினம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது மேல் நீதிபதி கவுனவத்தை ஆலய நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். நீதிபதி அத தொடர்பில் குறிப்பிடுகையில் , ஆலயத்தில்...

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்றிரவு திடீரென மெழுகுவர்த்தி ஏற்றும் இடத்தில் தீப் பற்றியதில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மெழுகுதிரி ஏற்றும் இடத்தில் திடீரென தீப்பற்றியது. இதனால் சிறிது நேரம் அப்பகுதி புகைமூட்டமாக காணப்பட்டது. எனினும் தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தமிழக மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவைப்...

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பெருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாட்டு கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுவெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பக்தர்கள் வருகைதரவுள்ள நிலையில்,...

எதிர்வரும் மாதம் 11, 12 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் பூர்வாங்க எற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகப்பட்டுள்ளதென மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உறையாற்றும்போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் 4,000 ஆயிரம் பக்தர்கள்...

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நத்தார் மரம் இன்று(24) இரவு 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த கிறிஸ்மஸ் மரமானது 325 அடி (100M) உயரமுடையதாக அமைக்கப்பட்டு, உலகிலேயே மிக உயரமான நத்தார் மரம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 1950 ஆம் ஆண்டு வொஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட 221 அடி உயரம் கொண்ட...

All posts loaded
No more posts