- Wednesday
- January 22nd, 2025
நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ காலத்தில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், சோதனை நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்கானர் (metal detector) இயந்திரங்களைப் பொருத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார். வடக்கு ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
நல்லூர் ஆலயத் திருவிழா காலத்தில் தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கலாசார உடைகளை பக்தர்கள் அனைவரும் அணிந்து வரவேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் எஸ்.நிஷாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கோயிலின் பெரும்...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் என, யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாளை (இன்று) ஆரம்பமாகவுள்ள, யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய...
நல்லூர் ஆலய சூழல் முழுமையான இராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 01ஆம் திகதி வரையில் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. அந்நிலையில் ஆலயத்தின் பாதுகாப்பையும் , ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக ஆலயத்தை சூழவுள்ள வீதிகள்...
மடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் , மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை மாலை...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளையதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் காவற்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆராய்ந்தனர். அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு வசதியாக யாழ்ப்பாணம் மாநகர சபையால் 3 லட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட போதும் மேலதிகமாக...
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழாவில் நேற்று மாலை திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து கந்தன் வெளி வீதியுலா வரும் காட்சி நிறுத்தப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் கற்பூர திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 1008 சங்குகள் வைத்து சங்காபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை...
வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அனைத்து சமூக மக்களிற்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஜன இயக்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த போராட்டத்தில், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமாரும் கலந்து கொண்டு, தமது ஆதரவை தெரிவித்துள்ளார். ஆலயத்தின் திருவிழாவில் ஒரு...
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சமூகப் பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவிலில் கடந்த வருடம்...
கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவ அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை அறிக்கை கைவசம் வைத்திருக்காமல் சமையலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாவகச்சேரி சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பெருமளவு கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பொங்கல் உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றன. திருவிழாக்களை...
நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடிகள் எடுப்போர் மற்றும் காவடி முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘ஆலயத்திற்கு நேர்த்தி வைத்து...
இந்து ஆலயங்களில் மிருகங்களை பலி இடுவதை தடை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மிருக பலி கொடுத்தல் என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்காக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலேயே இந்த...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், இன்று காலை கொடியேற்ற பெருவிழா இடம்பெறவுள்ளது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்...
மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று (புதன்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. இன, மத பேதங்களுக்கு அப்பால் இலட்சக் கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துக் கொண்டார். இதன்போது, மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால்...
நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத்திருவிழா நேற்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மடுமாதா திருவிழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்துள்ளார். ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘யுத்த காலத்தில் 35 ஆயிரம்...
அச்சுவேலி - பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர். மேற்படி ஆலயத்தில் வருடா வருடம் ஒளியமைப்புச் செய்யும் ஒருவரை இவ்வருடம் அதைச்...
ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழீழ வரைபட அலங்காரத்துடன் அம்பாள் உலா வந்துள்ளார். மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நேற்று (29) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேற்படி திருவிழாவின்...
மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது அந்தோனியார் மற்றும் குழந்தை இயேசுவின் திருசெரூபங்கள் விழுந்து உடைந்துள்ளன. குறித்த சம்பவத்தால் தேவாலயத்தில் கூடி இருத்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் , சோகமாக காணப்பட்டனர்.அந்தோனியார் தேவாலய தேர் பவனி நேற்றைய தினம் மாலை இடம்பெற்றது. அதன் போது தேரில் அந்தோனியார் மற்றும் , குழந்தை...
தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது. சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தச் சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை பலராலும் வியப்பாகப்...
காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில், முன்னால் பவனி வந்த பிள்ளையார் தேர் குடை சாய்ந்தது. மழை பெய்த ஈரலிப்பால் நிலத்தில் காணப்பட்ட சகதிநிலை காரணமாக பள்ளம் ஒன்றுக்குள் தேர்ச் சில்லும் புதையுண்டு தேர் குடை சாய்ந்ததாக ஆலயத்தினர் தெரிவித்தனர். இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்த்திருவிழா...
Loading posts...
All posts loaded
No more posts