- Saturday
- December 21st, 2024
நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரரைத் தரிசிக்கத் திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆலய பரிபாலன சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம். எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்? வவுனியா மாவட்டத்தின்,...
ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்… வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து...
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது. இதனால் நேற்றையதினம் வியாழக்கிழமை ஆலயத்துக்கு வருகை தந்த காவடிகள் தடுக்கப்பட்டன. தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய...
வரலாற்றுச் சிறப்புமிக்க அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் அங்கு அடியவர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நிறுத்தப்பட்டது. கோவிட் -19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் அன்னதானம் வழங்கல் நிறுத்தப்படவேண்டும் என்று ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அனலைதீவுக்கு...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் திருவிழா...
நல்லூர் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் ஆலய உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன நாளை ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று ஆலய தர்மகர்த்தா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருவிழாவில் Covid – 19 நோய் பரவலை தடுக்கும் உபாயமாக அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்து, முருகப்பெருமானின் கொடியேற்ற...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும் என யாழ்.மாநகர சபை பிரதி மேயர் து.ஈசன் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும்...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார். அத்துடன், அங்கப்பிரதிஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாநகர சபையில் இன்று (செவ்வாய்கிழமை)...
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை அதிகம் பேர் பங்கேற்க முடியாத...
வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இன்று வெள்ளிக்கிழமை முதல் வணக்கத் தலங்களில் சமய வழிபாடுகளை கடைப்பிடிக்க முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வணக்கத் தலங்களில் ஆகக்கூடுதலாக 50 பேர் மட்டுமே சமய நிகழ்வுகளில்...
வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஆலயங்கள் உள்பட மத வணக்க ஸ்தலங்களில் வழிபாடுகளை நடத்த நாளை வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோவிட் -19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 50 பேருடன் வழிபாடுகளை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று அரச...
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்னதானம் வழங்குதல், சப்பற உற்சவங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று (புதன்கிழமை)...
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் நேற்று அதிகாலை மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது. கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர்...
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினர் பசியினால் துன்பப்படுபவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில்...
வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து நல்லூர் ஆலய சூழலில் யாசகம் பெற்ற 9 பேருக்கு தலா 20 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட உடமைகளை மீள வழங்குமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம், அவர் சுகநலத்துடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. நல்லூர் ஆலய வீதியில் மின்சாரம் தாக்கியதாக அம்புலன்ஸ் வண்டியில் அழைத்துவரப்பட்ட செல்லத்துரை ஜெகநாதன் (வயது – 64) என்ற முதியவர் இன்று காலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு உரிய...
நல்லூர் ஆலய வளாகத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இராணுவம் அங்கு தொடர்ந்தும் இருப்பதால், பக்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆலய திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு...
நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனமண்டபத்தில் நேற்ற முன்தினம் வியாழக்கிழமை(08) இரவு அண்மைக்காலத்தில் சைவசமயம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இந்த விசேட கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன், இந்துசமயக் குருமார்கள், இந்துமதத் தலைவர்கள், இந்து...
Loading posts...
All posts loaded
No more posts