- Saturday
- December 21st, 2024
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார். மேற்படி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான புற ஏற்பாடுகள் முதலாவது கலந்துரையாடலானது மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது....
நல்லூர் உற்சவத்தையொட்டி தினசரி புகையிரதச் சேவைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம்திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளதால், பக்தர்களின் நலன் கருதி தினசரி புகையிரத சேவைகளை அதிகரிக்குமாறு நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் பொது முகாமையாளர் புகையிரத திணைக்களத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் நேற்று (புதன்கிழமை) சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டடிருந்தனர், இதேவேளை வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி...
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று காலை இடம்பெற்றது. வசந்த மண்டவத்தில் விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் இடம்பெற்று, பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை, சமேதராக தேரில்வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்வாலயத்தில் மஹோற்சவம் கடந்த 02.08.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 26.08.2022 அன்று...
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் மேதகு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றது. இன்று காலை யாக பூஜையைத் தொடர்ந்து மகாபூர்ணாகுதி, தீபாராதனை, விசேஷ பூஜை என்பன இடம்பெற்று, வேத ஸ்தோத்திர, திருமுறை, நிருத்திய கீத வாத்ய உபசாரங்களுடன் கும்பங்கள் புறப்பட்டு வீதிப்பிரதட்சிணமாக வந்து...
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதற்கமைய, அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 500 பக்தர்களை அனுமதிப்பதாக...
கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கச்சதீவு தூய அந்தோனியார் ஆலயஅருட்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்தார். யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாக பூஜையொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இலங்கையிலுள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில், இன்று விசேட யாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள்,...
நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஆலயத்தை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து, யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன், யாழ்ப்பாண பொலிஸாருடன் நேரடியாக களத்திற்குச் சென்று கலந்துரையாடலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டார். அதாவது விசேட திருவிழாக்கள் மற்றும் பூஜை நேரங்களை தவிர மீதி நேரங்களில்...
மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் மேதகு அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். மடு...
நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தற்போது பரவி வரும் கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு நல்லூர்...
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலிலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை இனங்கண்டு, அவர்களையும் சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர். தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலிலுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை திருவிழாவுக்கு முன்னர் பி.சி.ஆர்.பரிசோதனை எடுக்கவேண்டும் என பொதுச்...
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின்படி...
சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையயில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நல்லைக் கந்தப் பெருமானின் வருடாந்தப் பெருந் திருவிழாவானது...
யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாண...
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர். இந்த மாதம் 10 ஆம் திகதி,கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன்...
தற்போது பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து கோரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும், துறவற இல்லங்களிலும், இறைமக்களின் இல்லங்களிலும் நாளை மே 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணி...
சிவராத்திரி நாளை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபை வருடா வருடம் கடைப்பிடிக்கும் சிவ வாரம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் சைவ மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொண்டு பணிகளுக்கு சிவதொண்டர்களையும் சிவமங்கையர்களையும் இணைத்து கொள்ளும் வேலைத்திட்டம் முக்கியமாக இக்கால கட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு குருதிக்கொடை...
வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த பதிவு நடவடிக்கை கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் ஆலயத்திற்கு வருகைதரும் பொதுமக்களின்...
Loading posts...
All posts loaded
No more posts