- Monday
- February 24th, 2025

இலங்கையில் இந்த ஆண்டு ஒரே நாளில் கோவிட் நோயாளிகள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை சனிக்கிழமை பதிவாகியுள்ளது. அதற்கமைய அன்னைறய தினம் 15 கோவிட் தொற்றாளர்கள் மற்றும் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன. தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கைக்கமைய, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 61 ஆகவும், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,357 ஆகவும் உள்ளது....

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது, இந்நிலையில் போரின் சுவடுகளை தாங்கிய முள்ளிவாய்க்காலில் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், வடக்கு, வடமத்திய,...

கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (15.05.2023) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாக தெரியவருகிறது. 2.1 ரிக்டர் அளவான சிறியளவு நிலநடுக்கமே பதிவாகியுள்ளது. இந்த விடயத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வட்ஸ் அப் குரூப் ஊடாக ஒன்றிணைந்திருந்த வன்முறை கும்பல்களை சேர்ந்த இருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவர்கள் முதல் 23 வயது இளைஞர்கள் வரையிலான சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து வன்முறை கும்பல் ஒன்றாக தம்மை சமூக ஊடகங்கள் ஊடாக அடையாளப்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக...

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்க தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து வரும் சில நாட்களில் மகிந்த பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் முயற்சியை முறியடிக்கக் கோரி, கொழும்பில் நாளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்காக உருவாக்கப்பட்ட துண்டு...

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (11) தற்கொலை செய்துள்ளார். கோவிற்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். என் சாவிற்கு காரணம் தனது கல்லூரி ஆசிரியர்...

மன்னார் - தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) மதியமளவில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த ஓட்டுநர் இவ்...

மன்னாரில் பாடசாலைகளை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த ஒரு கும்பல் முயற்சிப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு எதிரிலும் அதனை அண்டிய வீதிகளிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் வேன் ஒன்றில் சென்ற கும்பலொன்று உணவுப் பண்டமொன்றை வழங்கி இரண்டு மாணவர்களை...

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இராணுவத்தினரால் புகைப்படமெடுக்கும் பாணியில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் (09.05.2023) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சாவகச்சேரி சந்தை கட்டிட தொகுதியின் மேல் தங்கியுள்ள இராணுவத்தினர் சிவில் மற்றும் இராணுவ உடைகளுடன் மாணவர்களை புகைப்படமெடுத்து அச்சுறுத்தல்...

வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மீண்டும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முகக் கவசம் அணிவது ஒரு கட்டாய சட்டம் அல்ல, ஆனால் ஒரு கோரிக்கை...

காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதியில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும்...

நேற்றைய தினம் (26) 7 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (25), இலங்கையில் இருந்து நான்கு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (25) செவ்வாய்க்கிழமை இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றிவரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு :...

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும், தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் இன்று காலை சகல வர்த்தக நிலையங்களையும் மூடி வர்த்தக சமூகம், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்புடன் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு...

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. 7.3 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின்...

ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் என்ற அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என...

நெடுந்தீவு, மாவிலிதுறைக்கு அண்மையில் 5 பேரை வெட்டிக் கொலை செய்த பிரதான சூத்திரதாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் ஜெர்மன் குடியுரிமையுள்ள 50 வயதானவர். நெடுந்தீவு மாவிலித்துறைக்கு எதிரில் உள்ள வீட்டில் நேற்று காலையில் 5 சடலங்களும், ஒருவர் குற்றுயிராகவும் மீட்கப்பட்டனர். வீட்டு உரிமையாளர் கார்த்திகேசு நாகசுந்தரி (74), நாகநாதி பாலசிங்கம் (75), அவரது...

நேற்று முன்தினம் (20) இரவு யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள லக்ஸ் புதுமுக ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி அதன் உரிமையாளரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளருமான யெயந்திரன் மீது சாணித்தண்ணி ஊற்றி தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அருண்சித்தார்த் உட்பட பலர் யாழ்.பொலிஸாரால்...

யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறிந்த சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்த நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....

All posts loaded
No more posts