ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம் : நாடும் திரும்பும் ஜனாதிபதிக்கு உயர் அடுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி நாட்டிற்கு வரும் போது உயர் அடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல்...

விடுதலைப் புலிகள் தலைவரின் பிரேத பரிசோதனையை மூடி மறைக்கும் அரசாங்கம் – சிவாஜிலிங்கம்

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து முழுப் பொய்களை சொல்லி வருகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடுவதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் என்ன...
Ad Widget

நெடுந்தீவில் 38 பேரின் உயிரை காப்பாற்றிய கடற்படை!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நேற்று (07) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் இவர்களை மீட்டுள்ளனர். கப்பலில் இருந்த கட்டுமானப் பொருட்கள் மூழ்காத வகையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவுக்கு 38 பேருடன்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது!!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கஜேந்திரகுமார் – புலனாய்வாளர்கள் முறுகல்! வெடித்தது புதிய சர்ச்சை

யாழ்ப்பாணம்-மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது பொலிஸாரின் கடைமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மக்கள் சந்திப்பு இடம்பெற்ற இடத்தை அண்மித்து சாதாரண தர பரீட்சை மத்திய நிலையம் அமைந்திருந்த நிலையில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய நிலையிலேயே...

போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் சிறுவன் கைது!!

உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய சிறுவன் ஒருவன், உயிர் கொல்லி...

இலங்கையில் தீவிரமடையும் உயிராபத்தான நோய் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளார். தற்போது காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய பல நோய்கள் பரவி வருவதால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 02 நாட்களுக்குப் பின்னரும் மருத்துவரை சந்திக்க...

யாழ். தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு!! – 09 பேர் கைது!!

தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை, அகற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையை அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள்...

யாழில் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேர் கைது!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரால் நேற்று (22.05.2023) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் ஹெரோய்ன் பயன்படுத்தியமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனும் உள்ளடங்கியுள்ளார். அத்துடன் போதைப்பொருள்களை விநியோகிப்பவர் ஒருவரும் இதில் உள்ளடங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு சினோபெக் வருவது உறுதியானது!

உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd...

இலங்கையில் திடீரென உயர்ந்த கொவிட் மரணங்கள் – ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பு

இலங்கையில் இந்த ஆண்டு ஒரே நாளில் கோவிட் நோயாளிகள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை சனிக்கிழமை பதிவாகியுள்ளது. அதற்கமைய அன்னைறய தினம் 15 கோவிட் தொற்றாளர்கள் மற்றும் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன. தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கைக்கமைய, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 61 ஆகவும், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,357 ஆகவும் உள்ளது....

14ஆவது ஆண்டு நினைவேந்தல் : முள்ளிவாய்க்கால் பிரகடனம்!!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது, இந்நிலையில் போரின் சுவடுகளை தாங்கிய முள்ளிவாய்க்காலில் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

நீடிக்கும் கடுமையான வெப்பம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், வடக்கு, வடமத்திய,...

கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம்!!

கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (15.05.2023) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாக தெரியவருகிறது. 2.1 ரிக்டர் அளவான சிறியளவு நிலநடுக்கமே பதிவாகியுள்ளது. இந்த விடயத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

யாழில் சிறுவர்களை உள்ளடக்கிய வன்முறை கும்பல் ; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் வட்ஸ் அப் குரூப் ஊடாக ஒன்றிணைந்திருந்த வன்முறை கும்பல்களை சேர்ந்த இருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவர்கள் முதல் 23 வயது இளைஞர்கள் வரையிலான சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து வன்முறை கும்பல் ஒன்றாக தம்மை சமூக ஊடகங்கள் ஊடாக அடையாளப்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக...

பிரதமராக தயாராகும் மகிந்த!! – போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்!!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்க தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து வரும் சில நாட்களில் மகிந்த பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் முயற்சியை முறியடிக்கக் கோரி, கொழும்பில் நாளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்காக உருவாக்கப்பட்ட துண்டு...

ஆசிரியரின் பெயரை எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவன்!!

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (11) தற்கொலை செய்துள்ளார். கோவிற்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். என் சாவிற்கு காரணம் தனது கல்லூரி ஆசிரியர்...

மன்னாரில் முறியடிக்கப்பட்ட சிறுமிகள் கடத்தல் சம்பவம்!!

மன்னார் - தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) மதியமளவில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த ஓட்டுநர் இவ்...

மன்னாரில் மாணவர்களை கடத்த முயற்சிக்கும் மர்ம கும்பல்!! பொலிஸாரின் தீவிர பாதுகாப்பில் பாடசாலைகள்!!

மன்னாரில் பாடசாலைகளை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த ஒரு கும்பல் முயற்சிப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு எதிரிலும் அதனை அண்டிய வீதிகளிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் வேன் ஒன்றில் சென்ற கும்பலொன்று உணவுப் பண்டமொன்றை வழங்கி இரண்டு மாணவர்களை...

இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் !!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இராணுவத்தினரால் புகைப்படமெடுக்கும் பாணியில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் (09.05.2023) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சாவகச்சேரி சந்தை கட்டிட தொகுதியின் மேல் தங்கியுள்ள இராணுவத்தினர் சிவில் மற்றும் இராணுவ உடைகளுடன் மாணவர்களை புகைப்படமெடுத்து அச்சுறுத்தல்...
Loading posts...

All posts loaded

No more posts