- Sunday
- February 23rd, 2025

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவியின் கை அகற்றப்பட்டமைக்கு நீதி விசாரணை வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சகல துறையிலும்...

பிரித்தானியாவின் சேனல் – 4 இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை நேற்று இரவு வெளியிட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் ஒளிபரப்பப்ட்ட குறித்த நிகழ்ச்சியில் பிள்ளையான் குழுவில் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய அசாத் மௌலானா முக்கிய தகவல்களை முன்வைத்திருந்தார். ஆசாத் மௌலானா என்பவர் இந்த நாட்டில் நிதிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாக்கியுள்ளது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் தடைப்பட்டிருந்த மனிதப்புதைகுழி அகழ்வு பணியானது இன்று (06.09.2023) ஆரம்பமாக்கியுள்ளது. தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட...

யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்றைய தினம் மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தின் பிரதிகளை வடமாகாண ஆளுநர் , மனிதவுரிமை...

இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் மருந்துகள் மற்றும் பல்வேறு நோய்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பல குழுக்களில் அங்கம் வகிக்கும் இலங்கை மருத்துவ சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணரான ஆனந்த விஜேவிக்ரம, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அந்த தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பல்வேறு சிக்கல்களின்...

வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் நேற்று நண்பகல் டிப்பரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். இவ்விபத்தில் மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் வளைவு பகுதியில் திரும்பிய போதே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும், இதன்போது...

மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 மற்றும் 53 வயதானவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பள்ளிமடு, உலியன்குளம் பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்தனர். சடலங்கள் சம்பவ இடத்திலயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்கேநபர்களை கைது செய்வதற்கான...

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக குமார தெரிவித்துள்ளார். உடலால் உணரப்படும் இந்த வெப்பநிலையை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் அதிகூடிய வெப்பநிலை திருகோணமலை மாவட்டத்தில் நேற்று முன் தினம் பதிவாகிய நிலையில்,...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள செய்தி நகைப்புக்குரியது என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத், இதனை ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டார். அந்த செய்தியில், தனது கவனத்தை ஈர்த்துக்கொள்ளும் வகையில்...

நான் அறிந்த வகையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் உயிருடன் இருக்கலாம். ஆனால் அதை நான் சவாலுக்குட்படுத்த விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,''2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த...

யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் இந்து மயானத்தில் மூடப்படாத மனிதப் புதைகுழியில் உள்ள இறந்த உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நேற்றையதினம் (10.08.2023) ஆறுகால் மடப்பகுதியில் இறந்த குழந்தை ஒன்றின் தலைப் பகுதி வீட்டுக் காணி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப...

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாதங்களுக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது ” யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த...

சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் கிராம மக்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி யுவதியொருவரை காணவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி நீதி கோரியும் சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது இந்த பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு கிழக்கில் பல அரசியல் கட்சிகள் ,பல பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். வெள்ளிக்கிழமை (28) வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது....

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தைநேற்றைய தினம் (24) தாய்...

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏற்படுத்தி பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை அங்கு பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, பொலிசார் சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்துள்ளனர்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது. சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும் வரை இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுகள் முறையான நியமங்கள் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு...

All posts loaded
No more posts