பொதுமக்கள் அரசியல்வாதிகளை வழிநடத்தும் பொறிமுறை நோக்கிய நகர்வு: தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

பொதுமக்கள், அரசியல்வாதிகளை வழிநடத்தும் ஒரு பொறிமுறை நோக்கி நகர முயற்சி எடுக்க தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக பேரவை விடுத்துள்ள அறிவிப்பில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலே மக்கள் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அந்த மக்கள் தீர்ப்பு மதிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இந்தத் தேர்தலில் எந்தவொரு அணியினருக்கும்...

அம்பாறையில் வாள்வெட்டு தாக்குதல்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் மீது தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கோகுலராஜ் என்பவரின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்...
Ad Widget

வெள்ளை வாகனத்தில் வந்தோரால் இளம் பெண் கடத்தல்!!

யாழ்.நீர்வேலியில் வெள்ளை வாகனத்தில் வந்த கும்பல் வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு 20 வயதான இளம் பெண்ணை கடத்தி சென்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வாகனத்தில் சென்ற நான்கு...

ரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு: கறுப்பு,சிவப்பு துணிகளும் அகற்றல்!

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு,சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன....

விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத் தீர்மானம்- சசிகலா அறிவிப்பு

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது...

பெருவெற்றியை நோக்கி ராஜபக்ச அன் கோ; யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு பின்னடைவு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இன்று மாலை 5 மணிவரையான நிலவரப்படி ராஜபகசக்களின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 73 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம், திகாமடுல்ல மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல்...

எம்.ஏ. சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

எம்.ஏ.சுமந்திரனின் பல கருத்துக்கள், அறிக்கைகள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துவதாகவே உள்ளன எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=HncUNQ60H5E&feature=youtu.be சமீபத்தில் இலங்கை ஊடகவியலர்களிடையே இணையவழி செயலிமூலம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்...

தமிழ்மக்கள் வரலாறு கற்றுத்தந்த அரசியல் முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு சிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ்மக்கள் பேரவை கோரிக்கை

தமது தாயகம், மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றின் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆழமானது. ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த பற்றும் அரசியல் அறிவும் அரசியல்வாதிகளிலும் பார்க்க மேம்பட்டிருப்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருக்கின்றோம். எமது மக்கள் தமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை...

யாழ். போதனா 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 நோயாளிகள் சுயதனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம் விடுதியின் மலசல கூடத்தைப் பயத்தியமை மற்றும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில்...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது. பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும்...

விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவிடம் இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் குறித்து சம்பந்தன் கேள்வி!

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார். மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது....

யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பாக யாழ். போதனா பணிப்பாளர் வெளியிட்ட கருத்து

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம்...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7ஆம் விடுதியில் ஒருவருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அண்மையில் வீடு திரும்பிய அவர், கடமைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் அவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆவது நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்....

ஜனநாயக போர்வையில் வரும் பிரபாகரனின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை – பிரதமர்

போரின் மூலம் வெற்றிக்கொள்ள எண்ணிய கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது என மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். குருணாகல், தம்பதெனிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு...

யாருக்கு வாக்களிப்பது?- தமிழ் மக்கள் பேரவையின் அறிவிப்பு

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது, “70 வருடங்கள் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் எமது உரிமைப் போராட்டங்களிலே நாம் சுமந்த வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை என்பதை யாரும் மறுக்க முடியாது. நாம் உயிர்கொடுத்து காத்துவரும் எமது அடிப்படை அபிலாசைகள்...

கந்தக்காடு புனர்வாழ்வு கைதி வைத்தியசாலையிருந்து தப்பினார் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

அங்கொட ஐ.டி.எச். வைத்தியசாலையிலிருந்து கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த கைதியான நோயாளியொருவர் தப்பிச்சென்றுள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் அவரை கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அங்கொட ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சீனன்குடா, மாபிள் பீச் ரோட்டைச் சேர்ந்த முகமட் ஹசிம் முகமட் நசீம்...

வடக்கின் புதிய ஆளுநராக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா!!

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். பொதுத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமனத்தின் பின் இந்த நியமனத்தை வழங்க அவர் தீர்மானித்துள்ளார் என்று அறியமுடிகின்றது. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்....

தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை!!

தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு எனத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து...

அமெரிக்காவும், கனடாவும் மேற்கொண்ட சர்வதேச சமரச முயற்சியை முறியடித்து பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்கு காரணமானவர் சம்பந்தன்!!

ரணில் விக்கரமசிங்கவின், சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தவே சுமந்திரன் இருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் அரசு கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரிவாக மாற்றுவதுதான் அவரது நடவடிக்கை. வடமாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானத்திற்கு எதிராக சுமந்திரன் எழுதிய கடிதம் இப்பொழுதும் என்னிடமுள்ளது என தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சிவாஜிலிங்கம். பருத்தித்துறையில் நடந்த...

“இராமன் முஸ்லிம்களின் நபி, இராவணன் முஸ்லிம் மன்னன்” இது தான் உண்மை- மௌலவி முபாறக்

“இராவணன் ஒரு முஸ்லிம் என்பதினை தெரிவித்திருந்ததற்கு காரணம் இராவணன் எனும் ஒரு தவறு செய்யும் மன்னனை திருத்துவதற்கு வந்த நபியாக இராமன் இருந்திருக்கலாம். இலங்கை தீவில் எந்த இனம் இந்த நாட்டின் பூர்வீக இனம் என்பதில் பல சர்ச்சைகள் அடிக்கடி எழுகின்றது” என்று உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். நாடாளுமன்ற...
Loading posts...

All posts loaded

No more posts