- Thursday
- January 16th, 2025
யாழ்ப்பாணம், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றையதினம் (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் சிறுவனும் உள்ளடங்குவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். கடந்த மாதம் கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு...
நாட்டை முடக்காமல், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுவதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினைகளும் இன்றி நாட்டை முன்கொண்டு செல்ல முடியும் எனவும் சரியான...
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்காமல், பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்காமல் கொரோனா பரவலைத் தடுக்கும் பல அறிவிப்புக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். கொவிட்-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, மக்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவர்களை தங்கள்...
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் தொலைபேசியை நிறுத்திவைத்து தலைமறைவாகியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் ஆறு பேரையும்...
வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் மாநகரத்திற்கு வருகை தரும் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்துள்ளார். இந்த நடைமுறை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பின்பற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நகர மத்தியை...
வடக்கில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்படி, யாழ். மாவட்டத்தில் ஆறு பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில்...
வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர் ஊடாக தங்களது முழு விபரங்களை பதிய வேண்டும் என அம்மாவட்ட கொவிட் -19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது....
யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்து தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலில்...
மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரையில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உரிமையாளர்கள் இல்லாமல்- பயன்பாடின்றி காணப்படும் காணிகளை ஊடக நிறுவனம் ஒன்றின் பெயரில் உறுதிகள் தயாரிக்கப்பட்டு , அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தான் அறிந்து கொண்டுள்ளதாகவும், அவை தொடர்பில் பிரதேச செயலர்கள் கூடிய கவனம் செலுத்துமாறும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத்திற்கு பிரதேச வளங்களை பயன்படுத்தல் எனும்...
இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதுடைய வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் 75 வயதுடைய கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே குறித்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 42 வயதுடைய ஜா எல பகுதியை சேர்ந்த ஒருவர் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை...
யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட குருநகர், பாசையூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஏனையோருக்கு பாதிப்பு ஏற்படாது பேண இன்றைய தினம் முன்னேற்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் கலந்துரையாடப்பட்டது. அந்தப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி...
கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இன்று (27) முதல் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள்...
கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் அபாயத்தில் உள்ள மாவட்டங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டினார்....
யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்றையதினம்...
உக்ரைனிலிருந்து வந்த விமான பணியாளர்கள் குழுவைச் சேர்ந்த ஒருவரே இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலைக்கு காரணம் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அறிக்கையில் புலனாய்வு அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துருக்கியிலிருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்த உக்ரைன் பிரஜைகள் சீதுவையில் உள்ள...
இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து...
கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளி ஒருவர் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது அவரை அடையாளம் காண்பவர்கள் உடனடியாக 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். 26 வயதுடைய அந்த நபர் கொஸ்கம வைத்தியசாலையில் உள்ள கோவிட் -19 சிகிச்சை...
Loading posts...
All posts loaded
No more posts