யாழ்.நகர உணவகத்திற்கு தென்னிலங்கையிலிருந்து 3 நாள்களுக்கு முன் வந்த பணியாளர் திடீர் சாவு!!

யாழ்ப்பாணம் நகரில் கே.கே.எஸ் வீதியில் இயங்கும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தென்னிலங்கையிலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன் அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பணியாளர் நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர்...

அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் யாழ்ப்பாணம்- அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றம் புயல் உருவாக்கம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை...
Ad Widget

யாழ்ப்பாணத்தை 24 மணிநேரத்தில் சூறாவளி தாக்கும் அபாயம்!! : வளிமண்டல திணைக்களம்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட கரையோரப் பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளி தாக்கும் அபாயம் காணப்படுவதாக யாழ். பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும், கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்....

கோவிட் -19 தொற்றிலிருந்து யாழ்ப்பாணத்தைக் காப்பாற்ற மக்களின் ஒத்துழைப்பு தொடர்ந்து அவசியம் – கட்டளைத் தளபதி

“யாழ்ப்பாணம் மக்கள் சட்டங்கள், சுகாதாரக் கட்டுப்பாடுகளை மதித்து நடந்து கொள்வதில் சிறந்தவர்கள் என்பதை நான் நேரில் கண்டுகொள்கின்றேன். கோவிட் -19 நோய் தொற்று கட்டுப்பாட்டுகளை யாழ்ப்பாணம் மக்களே சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள்” இவ்வாறு யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்த் தொற்று நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தின்...

வங்காள விரிகுடாவில் நிவர் புயல்: வடக்கு கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிப்பை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணிநேரத்தில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘நிவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை...

வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். வெள்ளவத்தையைச் சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவர் முல்லேரியா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதேபோன்று கொழும்பு 13ஐச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 10ஐச் சேர்ந்த 72 வயது ஆணும் தங்கள் வீடுகளில்...

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2020-11-18 அன்று இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை வணக்கம், இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அன்று எனக்கு பெரும்பான்மையான சிங்கள...

யாழ். பல்கலை மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த இளங்குன்றன் என்ற குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தனது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், மாணவன் இன்று வகுப்புகளுக்கு சமூகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக...

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ,இதன்படி, கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண், இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் மற்றும் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த...

கொழும்பில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறியுள்ளதா?

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறியுள்ளதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் 3 இறப்புகள் பதிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து அவருக்கு நீரிழிவு நோயுடன் கொரோனா வைரஸ் தொற்று...

இலங்கையில் கடந்த 15 நாட்களில் கொரோனா வைரஸால் 45 மரணங்கள் பதிவு

நாட்டில் கடந்த 15 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் 45 மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வரையில் 13 கொரோனா மரணங்களே பதிவாகியிருந்த நிலையில், சடுதியாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்றாவது முறையாகவும் நேற்று ஒரே நாளில் 5 மரணங்கள்...

உயிரிழந்த முதியவரின் உடலை உரிய அனுமதிகளின்றி கொண்டு வரப்பட்டதால் 14 குடும்பங்கள் ஊர்காவற்றுறையில் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா அபாயமுள்ள வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடல் உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட எழுவைதீவு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் மாகாணமொன்றில் உயிரிழந்த 95 வயதான முதியவரின் சடலமே எழுவைதீவிற்கு கொண்டு வரப்பட்டது....

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட.பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றது- கஜேந்திரன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தால், அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்க நேரிடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நாடாளுமன்ற...

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா: கடந்த 24 மணித்தியாலங்களில் 5 பேர் உயிரிழப்பு – 635 பேருக்கு தொற்று

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், அவருக்கு தொற்று அதிகரித்தமையால் ஏற்பட்ட மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல்...

இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவு!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது. பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய பாணந்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 41 ஆக பதிவு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ராகமை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...

மேல் மாகாணத்துக்கான தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள்!- யாழ் அரச அதிபர்

பொதுமக்கள் தேவையற்ற மேல் மாகாணத்துக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணத்தில்...

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 35ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 78 வயதான ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தமை தெரியவந்ததாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவரது மரணத்துக்கான காரணம்...

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொ்றறினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர் ஆண்கள் எனவும் மூவர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் கொழும்பு 02, 12, 14, 15 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு-02 பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் கொரோனா...
Loading posts...

All posts loaded

No more posts