கோவிட் -19 நோய்க்கான ஆயுர்வேத பானத்தை வாங்க மக்கள் அலை மோதல்

கோவிட் – 19 நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்று கூறி ஆயுர்வேத வைத்தியர் தம்மிகா பண்டாரவினால் வழங்கப்படும் ஆயுர்வேத பானத்தை (டொனிக்) வாங்குவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். கேகாலையில் உள்ள ஆயுர்வேத வைத்தியரின் வீட்டிற்கு அருகே ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆயுர்வேத வைத்திய பானத்தை அண்மையில் சுகாதார அமைச்சர்,...

இலங்கையில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!!

நாட்டில் தற்போது ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு மரணமும்...
Ad Widget

பருத்தித்துறையில் கொரோனா சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!

பருத்தித்துறையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் நேற்றையதினம் அதிகாலை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை திருநாவலூர் பகுதியில் வசித்து வந்த நபரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அண்மையில் கொழும்பில் இருந்து திரும்பியுள்ளார் என்றும், அவருடன் தொடர்புபட்ட ஒருவருக்கு கொழும்பில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து...

பொதுமக்களின் சமூகப் பொறுப்பற்ற தனமே யாழ் வெள்ளத்திற்கு காரணம்!! : அரச அதிபர்

யாழ் மாவட்ட மக்கள் சமூக அக்கறையோடு செயற்படும்போது வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்ந்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...

வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் குறிப்பாக காலை வேளையில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் அத்திணைக்களம்...

நாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 26,038 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 627 கொரோனா தொற்றாளர்களும் மினுவாங்கொடை - பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள்...

பிரபாகரனைக் கொல்வதற்காக இலட்சக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றமையே யுத்தக் குற்றம்- கஜேந்திரகுமார்

பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியமையும், ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதறாக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையுமே நாம் கூறும் போர் குற்றம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

யாழில் தொடர் மழையால் 1,500இற்கு மேற்பட்டோர் பாதிப்பு- மூவரைக் காணவில்லை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போதுவரை 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல் போயுள்ளதாகவும்,...

மரங்கள் சாயும், மின் தடை ஏற்படலாம், குடிதண்ணீரை சேகரித்து வைக்கவேண்டும் – யாழ்ப்பாணம் மக்களுக்கு முன் எச்சரிக்கை

காலநிலை சீரின்மையால் யாழ்ப்பாணம் மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்ப்படுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள மாவட்ட செயலர் க. மகேசன் , கோவிட் -19 நோய் தொடர்பிலும் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்திந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;...

இலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை!

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு...

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!!

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். வயோதிபர் கடந்த சனிக்கிழமை முதல் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக அவர்...

இலங்கை உள்நாட்டு போர்: அதிரடிப்படைக்கு பயிற்சி கொடுத்த பிரிட்டிஷ் கூலிப்படையிடம் விசாரணை!!

இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரிட்டிஷ் கூலிப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை லண்டன் பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். 1980களில் தமிழ் பிரிவினைவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, இலங்கை காவல்துறையினரில் ஒரு பிரிவினருக்கு பயிற்சி கொடுத்தது தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ் (Keenie Meenie Services - KMS)....

யாழ்ப்பாணம் மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை – தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொற்று இருந்தால் காரைநகர் தனிமைப்படுத்தப்படும்

யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் முடக்கப்படும் என சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் அனைத்தும் தவறானவை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். அத்துடன், காரைநகரில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செய்யப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் பலருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே காரைநகர் பிரதேசம் மட்டும்...

கார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், மாணவன் கோப்பாய் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட...

யாழில் கொரோனா அச்சநிலை- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு

யாழில் கொரோனா அச்சநிலை தொடர்பா வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். குறித்த அறிவிப்பில், “கொழும்பில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன் சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது யாழ். மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உறவினர்கள்,...

யாழ். ஆய்வுகூட பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 352 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களில் வவுனியா, பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலில்...

உரிமையைத் தடுக்க முடியாது- மாவீரர் நாளில் விளக்கேற்ற தமிழ் தேசியக் கட்சிகள் அழைப்பு!

எத்தனை தடைக் கட்டளையை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும் எமது மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது என அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், கார்த்திகை 27ஆம் திகதி மக்கள் இல்லங்களில் மாலை 6.05இற்கு நினைவுகூரலை மேற்கொள்ளுமாறு குறித்த கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் அலுவலகத்தில் அனைத்து...

யாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தபுராண வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த அவர் கிளிநொச்சிக்கும் வான் ஒன்றில் சென்று வந்துள்ளார். அவர் கொழும்பிலிருந்து வருகை தந்தமை...

நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக தெரிவிப்பு!

நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை 10.30 மணியளவில் இந்த சூறாவளி காங்கேசந்துறை கடற் பிரதேசத்தில் இருந்து 325 கி.மீ தூரத்தில் கடற் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை...

யாழ்.நகர உணவகத்திற்கு தென்னிலங்கையிலிருந்து 3 நாள்களுக்கு முன் வந்த பணியாளர் திடீர் சாவு!!

யாழ்ப்பாணம் நகரில் கே.கே.எஸ் வீதியில் இயங்கும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தென்னிலங்கையிலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன் அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பணியாளர் நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர்...
Loading posts...

All posts loaded

No more posts