- Wednesday
- January 15th, 2025
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் நாட்டில் மேலும் 370 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை...
யாழ்ப்பாணம் மானிப்பாயில் 8 மாத ஆண் சிசு ஒன்று மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக நேற்று (17) காலை தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிசு, சில மணி நேரங்களில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. சிசுவின் உயிரிழப்புக் காரணம் தெரியாத நிலையில், சடலத்தைப் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள் நேற்றுமுன்தினம் பெறப்பட்டு தென்னிலங்கை ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைப்பட்டன. அவர்களில் 39 வயதுடைய வியாபாரிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம் ஆகிய சந்தைகள் வரிசையில்...
எதிர்வரும் இரண்டு வாரங்களிற்கு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... “தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கத்தின்...
யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி சங்கானையில் 4 பேருக்கும் உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய் மற்றும் வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதனார்மடம் சந்தையுடன் தொடர்பில் இருந்த நிலையில் இவர்களின் பெற்றோருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் 80 பேர் மற்றும் ஆசிரியர்கள் இரு வாரங்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் எதிர்ப்பால் இரண்டாவது தடவை தோற்கடிக்கப்பட்டது. அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் பதவியிழந்தார். 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் கடந்த ஆண்டு இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட நிலையில் முதல்வர் தனக்கு...
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரிஆர் முடிவு அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தினால் இன்று (டிசெ. 15) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. உடுவிலைச் சேர்ந்த 2 பேரும் தெல்லிப்பழை, சண்டிலிப்பாயைச் சேர்ந்த...
கோரோனாத் தொற்று சமூக மட்டத்தில் பரவும்போது கண்டறியப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 30 சதவீதத்தினர் நோய் அறிகுறியற்றவர்களாகக் காணப்படுவர். ஒருவரின் உடலில் நோய்க்கிருமித் தொற்று இருப்பின் மூன்று வாரம் வரை ஏனையவர்களுக்குத் தொற்ற வாய்ப்பு உள்ளது. கோரோனாத் தொற்றுத் தொடர்பாக நோய் அறிகுறி, தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். சமூகத்தில் எழுந்தமானமாக யாரிடமும் பரிசோதனை மேற்கொள்ள...
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எட்டுப் பேருக்கு...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் கானப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலயே உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 1144 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்தாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தின் தற்போதய நிலை குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு...
கொவிட்-19 வைரஸ் தொற்றை உறுதிச்செய்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களது சொத்துக்களை தடைச் செய்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார். வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டலுகம போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன்...
உடுவில் பி்ரதேச செயலக பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டு குறித்த பிரதேசம் விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். எனினும் மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்பட்டிருக்கும். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களது குடும்பத்தையும் அவர்களுடன் தொடர்புடையோரையும் வீடுகளில்...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென் மயங்கிச் சரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக் காரணம் தொடர்பில் கண்டறிவதற்கு குருதி மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. அராலி கிழக்கைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான மதுசன் பிரபாகினி (வயது 29) என்பவரே...
யாழ்ப்பாணம் – சுன்னாகம் முடக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற செய்திகளில் உண்மையில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். குறித்த செய்தி தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், உடுவில் பிரதேசத்தில் மாத்திரமே தற்காலிக நடமாட்டத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் – சுன்னாகம் முடக்கப்பட்டிருப்பதாக...
கிளிநொச்சி, பாரதிபுரத்தில் கோவிட் – 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 25 பேர் மாங்குளம் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடமாடுவது தொடர்பில் பொதுச் சுகாதாரப்...
தமது கட்டளையை மீறி சென்றார் என பொதுமகன் ஒருவரை துரத்தி வந்து வீதியில் இடைமறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கியை நீட்டி சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் , மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி , உடுப்பிட்டி சந்திக்கு அருகில்...
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. எங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள் என்று உறவுகள் கதறி அழுதனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது. தற்போது நாட்டில்...
தங்களது விடுதலைக்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், “நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் சுமார் எட்டாயிரம் கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமான...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை விடுவிப்பதற்குரிய கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சு அங்கிருந்து அனுப்புவதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து மருத்துவர்களின் அடையாள சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சு ஒருவாரகாலத்திற்குள் உணர்வழியியல் மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கத் தவறினால் ஆறான வாரம் தமது...
Loading posts...
All posts loaded
No more posts