- Wednesday
- January 15th, 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவனுக்கே நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவன், வீட்டுக்குச் சென்று...
இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் போது இலங்கைக்கு முக்கியதுவமளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த...
வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 469 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா பட்டாணி சூர் பகுதியில்...
பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன் மருதனார்மடத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகத்துக்கு சென்றிருந்ததாகவும் அங்கு குடிதண்ணீர் குடித்ததாக அவர் சுகாதாரத் துறையினருக்கு தெரிவித்தார்....
மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று (ஜன. 4) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர்...
“கோவிட் – 19 தொற்று நோயால் இருண்ட பயணத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒளிக்கீற்றுக்களாக தெரிகின்றன. இந்தப் பேரவலத்திலிருந்து இவை மக்களை மீட்டெடுக்கும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. ஒரு நாட்டில் கோரோனா தொற்று பரம்பலை முற்றாக நிறுத்த வேண்டுமாயின் அந்த நாட்டு சனத்தொகையின் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை அடைந்தால்தான்...
நாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே குறித்த தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு,...
கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது....
மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (புதன்கிழமை) 130 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ...
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்லிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் விட ஒரு மேலதிக வாக்குகளைப் பெற்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவாகியுள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார். முன்னதாக, இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான யாழ்ப்பாணம் மாநகரசபையின்...
மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் (டிசெ. 29) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 8 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்....
கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை வாசியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (27) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனையில் கொரோனா நோயாளி ஆக இனம் காணப்பட்டவர்களில், யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த நபரும் உள்ளடங்குவாதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நபர்,...
மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் ஒரு வியாபாரிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (டிசெ. 27) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதன்மூலம்...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகக் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால், குறித்த தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கொரோனா...
மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது....
கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புதிதாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார். இதேநேரம், நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மருந்துகளுக்கு தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் அஸ்டிராஜெனேகா, மொடேர்னா, பைசர் பயோன்டெக் ஆகியவற்றின் மருந்துகளுக்கும் ரஸ்யாவின் ஸ்புட்னிக் ஆகியவற்றிற்கே இலங்கையின் தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது. நான்கு மருந்துகளும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவை என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹெமந்த டொடாம்பஹல...
யாழில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 412 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 3 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்...
மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எனினும் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ – உணவு வசதிகளோ ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் எனவும்...
யாழ்ப்பாணத்தில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 382பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதில் கோப்பாய், ஊர்காவற்துறை மற்றும் இனுவில் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் அனைவரும்...
Loading posts...
All posts loaded
No more posts