- Wednesday
- January 15th, 2025
தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக...
யாழ்.நகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப் பவுண் நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். கொழும்புத் துறையில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் புகுந்த மூவரடங்கிய கும்பல் அங்கு வசித்த வயோதிபர்களை மிரட்டி 8 தங்கப் பவுண்...
கிளிநொச்சி, பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது...
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று மதியம் கைது செய்தனர். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில்...
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (புதன்கிழமை) உறுதியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் என்றும் மற்றைய மூவரும் பூநகரியைச் சேர்ந்தவர்கள் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 491 பேரின்...
கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய...
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வெள்ளை கொடியை காண்பித்தவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது நவநீதம் பிள்ளை மேலும் கூறியுள்ளதாவது,...
24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று (15) இரவு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்ள...
புதிய கோவிட்-19 வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தொழில்நுட்ப மதிப்பீடு செய்யப்படும் வரை நாடு பூட்டப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். நாடு முடக்கத்தின் கீழ் வைக்கப்படும் என்று செய்திகள் பரப்பப்படுகின்றன. எனினும், இப்போதைக்கு, நாங்கள் ஒரு முடக்கத்துக்குச் செல்ல விரும்பவில்லை என்று இராணுவத் தளபதி...
தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்களை எடுத்துள்ளன. இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிலையில், இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தக்கூடிய...
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பு, அவிஸ்ஸாவெல்ல, பியகம மற்றும் வவுனியாவில் இருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை மிக வேகமாக பரவுக்கூடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு உயிரியல்...
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை- கச்சேரி தனியார் பேருந்து சேவையின் நடத்துனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 379 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன....
வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 776 பேரின் மாதிரிகள் பிசிஆர்...
வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்...
நாட்டில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் மொத்தமாக 976 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 971 பேர் பெலியகொட – மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய நான்கு...
கொரோனா தொற்று உறுதியாகி யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் நேற்றையதினம் (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த மாதம்...
நாள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தலைவரை வாள் மற்றும் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு 6 பவுண் தாலிக்கொடியை கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில் செபஸ்தியான் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில்...
கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் பணியாற்றிய ஏனைய ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) கடமைக்குச் சென்ற நிலையில், அவர்கள் தமது அச்சத்தினை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத குறித்த ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகம் தொடர்ந்தும் அவர்களை சேவையாற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால்...
வடக்கு கிழக்குத் தாயகம் முழுவதுமாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நேற்றையதினம் பொலிகண்டியில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. குறித்த பிரகடனத்தில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை,...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் பேரணியினை வரவேற்பதற்கு முல்லைத்தீவில் நாயாற்றுப் பாலத்திற்கு அருகில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் தயாரான நிலையிலுள்ளனர். இந்நிலையில், குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் தடையுத்தரவுடன் வருகை தந்துள்ளனர். அவ்வாறு வருகை தந்த பொலிஸார் தற்போது நிலவும் கொவிட் -19 நிலைமைகளைக் காரணங்காட்டி, பேரணிகள்...
Loading posts...
All posts loaded
No more posts