Ad Widget

யாழில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!!

குருநகர் பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய சக்திவாய்ந்த வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கு கடற்படைக் கட்டளைப் பிரிவினரால் நேற்று (17.10.2023) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பொதியிலிருந்து ஒரு கிலோகிராமும் 950 கிராமும் நிறையுடைய வெடிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், வெடிபொருளுக்கு பயன்படுத்தப்படும் ஒருவகை நூலும் குறித்த...

கிளிநொச்சியில் சோகம்: 17 வயதுடைய இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

கிளிநொச்சி - பெரியபரந்தன் பகுதியில் நண்பிகளான பாடசாலை சிறுமிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர். நேற்று (16.0.2023) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தற்கொலை செய்துள்ளனர். சுரேஸ்குமார்...
Ad Widget

சிறுமி வைசாலி விவகாரத்தில் மூன்று பேரை உடனடியாக கைது செய்ய கோரிக்கை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர்...

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(10.10.2023) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்...

யாழில் சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!!

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, இன்று திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை...

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவியை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் அவரது தொலைபேசி...

கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வெடிக்கும் ஆபத்து!!

கொழும்பின் பல பகுதிகளை இலக்கு வைத்து எதிர்வரும் நாட்களில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என கிடைத்த தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார் என திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது...

யாழில் இன்று மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகியமை தொடர்பாக யாழில் இன்று(04) மனித சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கலந்துகொண்டு...

எரிபொருள் விலை அதிகரிப்பு!!

நேற்று (01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்தின் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையக 6 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 420 ரூபாவாகும். 1 லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது....

இலங்கையில் நிலநடுக்கம்!!

புத்தல பகுதியில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, புத்தலவில் 2.4 ரிச்டர் அளவுகோலில் சிறிய நடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, காய்ச்சல் காரணமாக கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 12 இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என முல்லைத் தீவு நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்;. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 09 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவு –...

யாழ். சிறுமி கொலை வழக்கில் பாட்டியின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன் எனவும் கொலை செய்த பின்னர் நானும் உயிரை மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் எனவும் பாட்டியார் பொலிஸாருக்கு...

8 ஆவது நாளாக இடம்பெறும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொக்கு தொடுவாய் மனித புதை குழி அகழ்வுப் பணிகள் கடந்த 6 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 7 ஆவது நாளான நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியின் போது 3 மனித...

கிளிநொச்சி உயர்தர பாடசாலை மாணவி மாயம்! பொதுமக்களின் உதவிகோரியுள்ள பொலிஸார்

கிளிநொச்சி, விநாயகபுரம் பகுதியில் காணாமல்போயுள்ள உயர்தர பாடசாலை மாணவி ஒருவரை கண்டறிய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். இந்த மாணவியைக் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். 18 வயதுடைய புவனேஷ்வரன் ஹனி என்ற மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார். குறித்த மாணவி மேலதிக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்குவது கேள்விக்குறியே: கஜேந்திரகுமார்

உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (11.09.2023) ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஐந்தாம்...

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

யாழில் சிறுமிக்கு கை அகற்றப்பட்ட சம்பவம்: நீதி கோரும் ஆசிரியர் சங்கம்

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவியின் கை அகற்றப்பட்டமைக்கு நீதி விசாரணை வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சகல துறையிலும்...

சர்சைக்குரிய செனல் – 4 வீடியோ தொடர்பான முழு விபரம்!

பிரித்தானியாவின் சேனல் – 4 இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை நேற்று இரவு வெளியிட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் ஒளிபரப்பப்ட்ட குறித்த நிகழ்ச்சியில் பிள்ளையான் குழுவில் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய அசாத் மௌலானா முக்கிய தகவல்களை முன்வைத்திருந்தார். ஆசாத் மௌலானா என்பவர் இந்த நாட்டில் நிதிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி...

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் சற்று முன் ஆரம்பம்!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாக்கியுள்ளது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் தடைப்பட்டிருந்த மனிதப்புதைகுழி அகழ்வு பணியானது இன்று (06.09.2023) ஆரம்பமாக்கியுள்ளது. தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட...
Loading posts...

All posts loaded

No more posts