- Wednesday
- January 15th, 2025
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 27 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் மேலும் 29 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 320 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு...
விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இணையத்தளம் மற்றும் யூடியுப் ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 35 வயதான பெண்ணொருவரும் 36 வயதான ஆணொருவரும் இவ்வாறு, நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....
யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபைக்குட்பட்ட புத்துார் - நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மீண்டும் அகழ்வு பணிகளை தொடங்கியிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகின்றது. நிலாவரை கிணற்றை அண்மித்த பகுதியில் கடந்த மாதம் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பினால் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் மீளவும் குறித்த பகுதிக்கு வந்துள்ள தொல்லியல்...
சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தேசிய நீதிமன்றங்கள் ஊடாக சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதை உறுப்புநாடுகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட...
வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில் 66 பேர் யாழ்ப்பாணம் மாநகர மத்தி நவீன சந்தைப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 677 பேரின் மாதிரிகள்நேற்று (வியாழக்கிழமை)...
யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் யாழ். மக்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அதிபர், “யாழ். மாவட்டத்தில் அண்மைய...
திருநெல்வேலி போதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின்...
வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் 24 பேருக்கும் உடுவில் மற்றும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவரும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை யாழ். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மூவருக்கும் யாழ்ப்பாணம்...
யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்ட நிலையில் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது....
வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 பேருக்கும் கிளிநொச்சி மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரிபிரிவில்...
புத்தாண்டு காலங்களில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இயல்பாக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மேலும் இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார். பொருட்களுக்கான விலை தள்ளுபடி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் என்பன அதிகளவிலான...
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக சுவீகரிக்கும் நடவடிக்கையைதொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், 1932 ஆண்டு உறுதியின்படி-...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கோவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றுமாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் இன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமாலை அந்த நோயாளியிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு மருத்துவ சேவை வழங்கிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கே...
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கும் மன்னாரில் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நல்லூர் சுகாதார மருத்துவ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயப்படுத்தும் நோக்கமாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “ஒருசில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் ஊடகத்துறைப் பற்றி ஒரு பாரிய எச்சரிக்கையை ஜனாதிபதி விடுத்துள்ளார்....
வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உள்பட யாழ்ப்பாணத்தில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 248 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது....
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்விகற்கும் கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறையைச் சேர்ந்த மாணவர்கள் மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதியான 09 பேரில் யாழ்ப்பாணம் மாநகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும்...
பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்தோடு மன்னாரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த பெண் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர்....
சர்வதேச நீதி கோரி நல்லூரில் நாளை புதன்கிழமை இடம்பெறும் பேரணிக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்நாட்டின் பூர்வீக குடிகள் ஆகிய நாம் எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு நீதி வேண்டியும் எமது உரிமைகளை பெற்றிடவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து...
Loading posts...
All posts loaded
No more posts