இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இந்தவிடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சனத்தொகை மற்றும் இலங்கையின் சனத்தொகைக்கமைய பதிவாகும் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாளாந்தம் ஆயிரத்து 900...

யாழ்ப்பாணத்தி்ல் கோவிட்-19 நோயால் உயிரிழந்த முதியவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு; இறுதிச் சடங்கில் குழப்பம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம்...
Ad Widget

கொடிகாம சந்தையுடன் தொடர்புடைய 12 பேர் உட்பட 30 பேருக்கு யாழில் கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளம நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 749 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 43...

வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில். “யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்துள்ளது....

யாழ்ப்பாணத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகள் மறு அறிவித்தல்வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளே நேற்று இரவு முதல் முடக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில்...

வடக்கில் மேலும் 43 பேருக்குக் கொரோனா- கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் 21 பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் 824 பேரின் மாதிரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேருக்கும்...

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரழப்பு 700ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ள மொத்த உயிரிழப்பு 700ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 709ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கியது!

நாட்டில் நேற்று மட்டும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 705ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 764 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறிய நிலையில்,...

நாடுமுழுவதும் தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறனை அதிகரிக்க நடவடிக்கை!!

தற்போது நாடுமுழுவதும் பரவி வரும் கோவிட்- 19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலை காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கோவிட்-19 நோயாளிகளின் தீவிர சிகிச்சைக்காக ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் மூன்று தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைக்க ஏற்பாடுகள்...

அவசரகால நிலை ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு தயார் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வடமாகாண குழந்தை நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றுவரை 1544...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் – இராணுவத்தளபதி

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் நாட்டை முடக்குவதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று!

இலங்கையில் நாளொன்றுக்கான அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 953ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 95 ஆயிரத்து 83 பேர்...

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள்...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு – ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொட, பன்னிப்பிட்டிய, அம்பகஹபலஸ்ஸ, வத்தள மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், 62, 45, 53, 56, 76, 48 மற்றும் 57 வயதுடைய ஆண்களும்...

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

கொரோனா தொற்று பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, மேல் மாகாணம், வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் அரசாங்க அதிபர்!!

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, யாழில் நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா வைரஸ்...

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன குணசேன மேலும்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு நேற்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். சாவகச்சேரியில் நால்வருக்கும், பருத்தித்துறையில் 2 பேருக்கும் தெல்லிப்பழையில் இருவருக்கும் சண்டிலிப்பாயில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற மூவருக்கு கொரோனா...

தீவிர சிகிச்சை பிரிவுகளில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆபத்தானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட திறனை மீறினால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கிறது. ஊடகங்களுடன் பேசிய சங்கத்தின் ஊடகக் குழுவின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பேஜ், இந்த நேரத்தில் வைரஸ் பரவுவதை நிறுத்தாவிட்டால், நாடு மீண்டும் மூடப்பட வேண்டும் அல்லது கடுமையான...

உடைக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் அதே இடத்தில் திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts