- Wednesday
- January 22nd, 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே (more…)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். (more…)
தைப் பொங்கலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் இதன்போது முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கு கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் ஜெய்க்கா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டிடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். (more…)
நல்லூர்க் கந்தன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலரணை அகற்றுவதற்கு படைதரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். (more…)
அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது. தடுத்து வைத்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர் விடுவிப்பதன் மூலம் (more…)
விடுதலைப்புலிகளின் இரண்டாம் பரம்பரை படையினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாண படைகளின் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி வழங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)
பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டி யது பெற்றோரின் கடமையாகும். அந்தப் பிள்ளைகள் தவறான வழியில் செல்வார்களேயானால் அதற்கான பொறுப்பில் இருந்து பெற்றோர் ஒருபோதும் விடுபட முடியாது. பிள்ளைகள் அவ்வாறு தவறான வழியில் சென்று சமூகவிரோதச் செயல்களில் ஈடு படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காக்கும் அதிகாரிகள், (more…)
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு ண்டுசெல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...