- Sunday
- February 23rd, 2025

உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கும் தையிட்டி மற்றும் மயிலிட்டி பிரதேச மக்கள் தமது சொந்த நிலங்களில் தம்மை குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

யாழ் மாவட்டம் வலி வடக்கு பிரதேசத்தில்; 7,061 குடும்பங்கள் இன்னமும் மீளக்குடியமர்தப்படாமல் நலன்புரிநிலையங்களில் உறவினர்கள் வீடுகளிலும் வாழந்துவருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத்தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். (more…)

தமது வீடுகளை உடைக்க வேண்டாம் என்று படையினரிடம் கெஞ்சியபோதும் தமக்கு மேலிடத்து உத்தரவு கிடைத்துள்ளது எனத் தெரிவித்து வீடுகளை அவர்கள் இடித்து வருவதாக வலி.வடக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் முறைப்பாடு செய்தனர். (more…)

வலி.வடக்கில் 23 வருடங்களாக தேசியபாதுகாப்பைக் காரணம் காட்டி அந்தப்பகுதி மக்கள் மீள் குடியமர்வதற்கு அனுமதி மறுத்துவரும் படையினர், தற்போது அந்தப் பகுதியில் 180 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில்முறை ரீதியான விவசாய நட வடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. (more…)

பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது வெலிகந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் எஞ்சிய இரண்டு மாணவர்களும் அடுத்த மாதமளவில் விடுதலை செய்யப்படுவர்கள் என இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

அமெரிக்கத் துணைத்தூதரகமொன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்குமாறு அமெரிக்க இராஜதந்திரிகளிடம், யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

வடக்கில் சிவில் நிர்வாகமே இடம்பெற்று வருகின்றது. தெற்கில் இராணுவ முகாம்கள் இருப்பதைப் போன்றே வடக்கிலும் அவசர தேவைகளுக்காக இராணுவ முகாம்களை அமைத்து இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

இராணுவத்தில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு தடை இல்லை. அதற்கு தகுதியுள்ளவர்களுக்கு எப்பொழுதும் வாசற்கதவு திறந்தே உள்ளது' என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். (more…)

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (more…)

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த மையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையாத மற்றும் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 1200 பேர் தற்போதும் மக்களுடன் மக்களாக மறைந்து வாழ்ந்து வருவதாக பாதுகாப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் பொலிஸாராலும் புலனாய்வாளராலும் கண்காணிக்கப்படுகின்றனர் என நாம் இலங்கையர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது (more…)

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாகுவதற்கோ அல்லது விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துவதற்கோ இராணுவத்தினர் ஒரு போதும் இடமாளிக்கமாட்டார்கள். (more…)

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது விசாரணைகளின் போது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கான புனர்வாழ்வு தொடரும். இல்லாவிட்டால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். (more…)

யாழ்.வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம் நிலச்சொந்தக்காரர்கள் முகாமை அங்கிருந்து அகற்றுமாறு தீவிரமான அழுத்தங்களை கொடுப்பதாக தெரிவித்துள்ள மக்கள் தாம் சொந்த இடங்களுக்கும் செல்லமுடியாமல், முகாம்களை விட்டும் வெளியேற முடியாமல் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். (more…)

மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கெற்பேலி பகுதியில் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கான அனுமதியினை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக சுமார் 64 பரப்பு காணியில் இராணுவ முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 10 மணியிலிருந்து நடைபெற்றுவருகிறது. (more…)

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணினிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts