லலித், குகனின் கடத்தலில் அரசாங்கத்துக்கு தொடர்பு

லலித் மற்றும் குகன் கடத்தலுடன் அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுது ஆடிகல சாட்சியமளித்துள்ளார். (more…)

யாழ். நகரில் கடையொன்று தீக்கிரை! பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கடை ஒன்று நேற்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஸ்ரான்லி வீதியில் மக்கள் வங்கிக்கு அருகாமையில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டதனால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. (more…)
Ad Widget

ரயில் உயர் பாதுகாப்பு வலய வேலியை பிய்த்துக் கொண்டு செல்லும்! -மகிந்த பதிலடி!

அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காணப்படும் குறை, நிறைகள் தொடர்பான அறிக்கையொன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாளை விடுதலை: ஜனாதிபதி

தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாளை புதன்கிழமை விடுதலை செய்யப்படுவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

ஐ.தே.க. எம்.பி. அரசுடன் இணைவு?

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. (more…)

‘யாழ் ஒளி’ ஜனாதிபதியினால் திறப்பு

'யாழ் ஒளி' உப மின் நிலையத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை திறந்துவைத்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடனேயே இந்த உப மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. (more…)

வலிகாமம் வட பகுதி மக்களின் காணிகளை சுவீகரிப்போம்: யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி

வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை: யாழ். கட்டளைத் தளபதி

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்' என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க உறுதியளித்துள்ளார். (more…)

வலி.வடக்கில் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியமர்வு?

வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள 6 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது. (more…)

வலி வடக்கு உண்ணவிரதப் போராட்டத்தில் ரணில் பங்கேற்பார்

தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியமர்த்துமாறு கோரி வலி வடக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)

காணிகளை அபகரித்து வீடுகளை உடைத்தால் நல்லிணக்கம் ஏற்படுமா?: சரவணபவன் எம்.பி

தமிழ் மக்களின் காணிகளை அபகரித்தும், வீடுகளை இடித்தும் வெறியாட்டம்போடும் போது தேசிய நல்லிணக்கம் உருவாக முடியுமா?" என்று கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியின் சுதந்திர தின உரையானது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது. (more…)

இராணுவ தளபதி, பொலிஸ் மா அதிபர் யாழ்.விஜயம்

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

தேசிய கொடியினை காலால் மிதித்த நால்வர் கைது

யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தி பகுதியில் தேசிய கொடியினை காலால் மிதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடியை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்பாட்டப் பேரணி நடாத்தப்பட்டுள்ளது. (more…)

கைவிடப்பட்ட காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் உள்ள வெற்றுக் காணிகள் தொடர்பான விபரங்களை உடனடியாகப் பெற்று தமக்க அனுப்பி வைக்கும்படி யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் சுற்று நிரூபம் மூலம் யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொது சுகதார அலுவலகர்களுக்கு அறிவித்துள்ளார். (more…)

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதானவர்களுடைய உறவுகளின் கண்ணீர்!!!

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழில் கைது செய்யப்பட்ட 44 பேரும் தொடர்ந்தும் பூசா தடுப்பு முகாமில் வழக்குகள் எதுவும் தொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். (more…)

நாவற்குழியில் சிங்களவரின் கட்டடங்கள்; பிரதேச சபை கண்டுகொள்ளாதமை ஏன்?

நாவற்குழியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சிங்கள மக்களால் நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும் அதனைச் சட்ட ரீதியாகத் தடுத்து நிறுத்துவதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரிப் பிரதேச சபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமை குறித்துக் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழில் தாக்குதல்

தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புத்தூரில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் விநியோகிப்பதற்கு எடுத்துச்சென்ற பத்திரிகையும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுக்கும் எரியூட்டப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த விநியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சொலமன் தீவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை

பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை (more…)

மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம், ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்

யாழ். குடாநாட்டில் 24 மெகாவாற்ஸ் மின்சாரம் விநியோகம் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts