- Sunday
- January 12th, 2025
யாழ்ப்பாணம்- தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. தெல்லிப்பழை பொியபுலம் பகுதியை சேர்ந்த 1 வயதான குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். அத்தோடு பானங்கள், பழங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், பியர்,...
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடு திறக்கப்படும்போது மீண்டும்...
வடக்கு மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் 75 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, வடக்கு மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை 11 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பபாணம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 81 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையியேயே 81 மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபசவினால் கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வதிரி, இரும்பு மதவடியில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்தப் பண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, நூற்றுக்கணக்கானோர் வரிசையில் திரண்டனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக...
முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – இதுவரை 20 சடலங்களை பாதுகாப்பதற்கான குளிரூட்டி வசதிகள்...
நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார். அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் நாளை தடுப்பூசி செலுத்தப்படுமென அவர் தெரிவித்தார். இந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் அதே தடுப்பூசி...
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தில் காணப்படுகின்ற தளர்வு நிலைமையால் முடக்கத்தின் மூலமான நேர்மறையான பிரதிபலனைப் பெற முடியாமல் போகும். எனவே தற்போதுள்ளதைப் போன்ற நிலைமையிலேனும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கக் கூடிய உயிர்களைக் கருத்திற் கொண்டு, தற்போதைய முடக்கத்தை இம்மாதம் 18 ஆம் திகதி வரையும் , ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையும் நீடிக்குமாறு...
நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். அதன்படி குறித்த ஊரடங்கு செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய அதிகரிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வு என பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிறந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகராசா பிரியதர்ஷினி (வயது -33) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இதேநேரம், கைதடி அரச...
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இன்று 103 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது....
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை...
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 129 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், வைத்தியசாலைகளிலும் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை,...
அரசாங்கம் தினசரி வெளியிடும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று ஊடக சந்திப்பின் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன, இலங்கையின் தினசரி கொரோனா வைரஸ் மரணங்கள், மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட முப்பது மடங்கு அதிகம்...
நாட்டில் 30-40வீதமான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது. முடிந்தளவு பொதுமக்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்குவதே இப்போது இருக்கும் ஒரே வழிமுறையாகும். ஆகவே குறைந்தது 21 நாட்களேனும் அவர்களைவீடுகளில் தனிமைப்படுத்தியத்தினால் நிலைமைகளை வெகுவாக குறைக்க முடியும் எனபொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன...
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (69 வயது) பெண் ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த (76 வயது) ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மந்திகை ஆதார...
பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண் (22 வயது) உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை சேர்ந்த குறித்த பெண், மூன்று நாள்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மூச்சு எடுப்பத்தில் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனால் குறித்த பெண்ணை, மந்திகை...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேநிலைமை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நீடித்தால் 10 ஆயிரம் பேரை பாதுகாக்க முடியும் எனவும்...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட...
Loading posts...
All posts loaded
No more posts