- Sunday
- January 12th, 2025
நாடு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட்டாலும் இரவு நேர ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமெனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது....
வடக்கு மாகாணத்தில் சிறப்பு தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் சிறப்புத்...
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்துவதற்கு தேவையான உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில் சுகாதார, போக்குவரத்து மற்றும் ஏனைய பிரிவுகளினால் இந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதாவது, செப்டெம்பர் மாதத்தின் நேற்று (வெள்ளிக்கிழமை) வரையான காலப்பகுதியில் வடக்கில் 8 ஆயிரத்து 401 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும்...
ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இந்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாடு திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இருப்பினும் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதி...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் இன்று(வியாழக்கிழமை) அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் நோக்குடன்...
யாழ்ப்பாணத்தில் இன்னமும் கணிசமான கர்ப்பிணித்தாய்மார்கள் மத்தியில் கோவிட்-19 தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. தடுப்பூசியானது ஏனையவர்களைப் போலவே கர்ப்பவதிகளை கோவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன் தொற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் மிக கணிசமான அளவில் குறைக்கும். மாறாக இத்தடுப்பூசியானது அதனைப் பெற்றுக்கொள்ளும் கர்ப்பவதிக்கோ, அவரது சிசுவிற்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு...
எதிர்வரும் நாட்களில் பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். விலை உயர்வை அனுமதித்தால் எந்தப் பற்றாக்குறையும் இல்லாமல் பொருட்களை வழங்க முடியுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் கூறினார். உலக சந்தையில் விலை உயர்வு...
கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி- உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர், கடந்த 16ஆம் திகதி, மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய இறுதி...
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார...
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்கள், அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்து வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை இணைந்து, கொக்குவில் கே.கே.எஸ் வீதியில்...
நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொரோனா தடுப்பு தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக எதிர்வரும்...
எதிர்வரும் 20 ஆம் திகதி தாக்குதல் ஒன்று நடாத்தப்படலாம் என கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை - மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தகவல் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
காங்கேசன்துறை பிரதான வீதியில் சுயநினைவற்று வீழந்து கிடந்த இளம் குடும்பத்தலைவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது தலையில் காயம் காணப்படுவதாகப் பொலிஸார் கூறினர். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளைக் கைது செய்யுமாறும் உறவினர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் கேட்டுள்ளனர். அதனால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது....
யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த நிலையில் பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார். அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “கடந்த 8ஆம் திகதி குறித்த கர்ப்பிணிப்...
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்தது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இதற்கு முன்னரும் இலங்கையில் கறுப்பு பூஞ்சை நோயுடன்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்.வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்ப்டார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனைத்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொ்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 157 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான நால்வரும் 60 வயதுக்கு குறைவான 23 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 110 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து...
யாழ்ப்பாணம் காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூறுக்கும் அதிகமானோர் பங்குகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் யார் என்று, காரைநகர் சுகாதாரத் தரப்பினரைத் தொடர்புகொண்டு...
Loading posts...
All posts loaded
No more posts