- Tuesday
- November 26th, 2024
யாழ். மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)
வடமாகாண சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று காலை 10 மணிக்கு வழங்கி வைத்தார். (more…)
வடக்கு மாகாண சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று செவ்வாய்க் கிழமை வழங்கவுள்ளார். (more…)
வட மாகாண சபையின் கன்னியமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)
சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக் கொள்ளப்படுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது ஊர்காவற்துறை பகுதியில் வைத்து கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)
காணி அதிகாரம் மத்திய அரசுக்குரியது என்று உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால், மாகாண சபைக்குரிய காணி அதிகாரங்கள் பறிபோய் விடும் என்று எவரும் கிலேசம் அடையத் தேவையில்லை என்று மூத்த சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மத்திய மாகாண சபையில் அமைந்துள்ள தோட்டக் காணி ஒன்று தொடர்பான வழக்கில், காணி அதிகாரம் மத்திய...
"காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கே உரியன. மத்திய அரசுக்கு இந்த அதிகாரங்கள் போகுமானால், சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவரப் பட்டு அவை மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்'' (more…)
அரசியல் பின்னணியில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியினால் செய்யப்பட்ட அரச நியமனமொன்றிற்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது. (more…)
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் பதவியை சம்பந்தன் அவர்கள் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கவுள்ளார் என்ற வதந்தியினை இணையத்தளம் ஒன்று பரப்பிவருகின்றது. அதில் எந்தவித உண்மையும் இல்லை என கூட்டமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றன. மேலும் போனஸ் ஆசனங்கள் அமைச்சர் தெரிவுகள் தொடர்பிலும் வதந்திகைள் உலாவருகின்றன. அதற்காக சிலர் பொது அமைப்புகள் ஊடாக கூட்டமைப்பின் தலைமையிடம் சிபார்சுகளை அனுப்பிவருவதாக கூட...
வட மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜை ஒருவருக்கு வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அயூப் நஸ்மீன் என்பருக்கே அந்த தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்....
காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றிற்கு தீர்ப்பு வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்...
நவநீதம்பிள்ளை அம்மையாரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் உரையைத் தாங்கிய பிரதிகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஐநாவின் மனித உரிமைகள் உதவி ஆணையாளரினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும்இ...
"வடக்கு மாகாணசபை முதலமைச்சராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் குழுத்தலைவராகவும் க.வி.விக்னேஸ்வரனைத் தெரிவு செய்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)
அமையவுள்ள வடமாகாணசபை அரசில் முதலமைச்சரால் 4 அமைச்சர்கள் வெற்றிபெற்ற உறுப்பினர்களில் இருந்து நியமிக்கப்படுவர்.அந்த நான்கு அமைச்சர்களும் யார் என இப்போதே ஆதரவாளர்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.அவற்றுக்கு பொருத்தமானவர்களை நியமிக்கவே்ணடிய தேவை கூட்டமைப்பினருக்கு இருக்கிறது. அவர்கள் முதலமைச்சருடன் ஒத்துழைக்கக் கூடிவர்களாகவும் துறைசார்ந்த விற்பன்னர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமாகின்றது.அதேவேளை கூட்டமைப்பில் உள்ள கட்சிகளையும் சமாதானப்படுத்தவேண்டியும் இருக்கும் இது தொடர்பில் முதலே கருத்தொற்றுமை மற்றும்...
வவுனியா மாவட்டத்தில் அரசுதரப்பு பெற்ற 2 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும் ஏ.ஜயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்று 2 சிங்கள மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். வவுனியாவில் 16638 வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் 41225 வாக்குகளை தமிழரசுக்கட்சியும் பெற்றிருந்தன.வவுனியாவில் அரசுதரப்புக்கு வழங்கப்பட்ட...
வடமகாணசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோகவெற்றியீட்டி 36 ஆசனங்களில் 28 இனை கைப்பற்றி மேலதிகமான 2 போனஸ் ஆசனங்களினையும் பெற்றுக்கொண்டிருக்கின்றது. 1988 மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தின்இலக்கம் 2 பிரிவு 62 இற்கமைவாக இங்கு கிடைத்துள்ள இந்த 2 போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு வழங்கவேண்டும் என கட்சியின் செயலாளரினால் தேர்தல் ஆணையாளருக்கு சிபார்சு செய்யப்படவேண்டும். இந்த போனஸ் ஆசன...
வட மாகாணத்தில் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:- வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்...
வட மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் பெறப்பட்டுள்ள மாகாணசபைக்கான அதிகாரங்கள் அனைத்தும் இறைமையின் நிமிர்த்தம் பகிர்தளிக்கப்பட வேண்டும்' என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)
தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு பின் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மாகாண சபை சில இடங்களில் அரசாங்கத்துடன்...
Loading posts...
All posts loaded
No more posts