- Sunday
- January 12th, 2025
அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு...
இலங்கையில் மேலும் 41 ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 45 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவர் ஒருவர் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான உபகரணம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தற்போது நாட்டில் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் மக்களின் உயிர் மற்றும் பொருள் சேதங்களுக்குள்ளாகி வருகின்றன. இதற்குத் தீர்வாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள கமு/கமு கார்மேல்...
பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகசந்தையிலும் உள்நாட்டிலும் பொருட்களிற்கு தட்டுப்பாடு காணப்படுவதால் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அரசாங்கம் சந்தையில் தலையிட்டு...
கொரோனா வைரஸின் பதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்ட இலங்கை குடும்ப வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன, இவ்வாறான அலைக்கு முகம் கொடுப்பதற்கும் அதனைத் தவிர்ப்பதற்கும் மக்கள் தங்களைத் தாங்களே முன்னிறுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது...
நாட்டில் ஒமிக்ரோன் திரிபுடனால் பாதிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார பிரிவு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்று காலை முதல்...
இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207...
டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹொங் கொங் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் இலங்கை உள்ளடங்களாக பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது. இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு...
சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட சிலிண்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதற்கமைய, தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும் பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட...
இந்தியாவிற்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீது தேசிய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாகவும், இலங்கைக்கு எதிராக போரில் ஈடுபட்டதாகவும் கூறியே இவர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில்...
கொவிட்-19 மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுக் காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளாது, டிசம்பர் மாத இறுதி வரை தொடர்வதற்கு தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். தற்போது நடைமுறையில்...
யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணிக்கு சேர்க்கப்பட்டார். எனினும் குடும்பப்பெண்...
துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வழமை போன்று நேற்று காலை, விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது,எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளது. இதன்போது வெடித்து சிதறிய...
இலங்கையில் இதுவரை சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்களும் 18 வயதுக்கு உட்பட்ட 89 குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக குடும்ப நலப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்தராமலி டி சில்வா தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கர்ப்பிணித் தாய்மார்களின் மரணங்கள் அனைத்தும்...
வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரச ஊழியர் ஆட்சேர்ப்பிற்கும் இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 533ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 757 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா...
Loading posts...
All posts loaded
No more posts