- Saturday
- January 11th, 2025
நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தவே முயற்சிப்பதாகவும், இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 25 கட்டில்கள் தற்போது...
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீளவும் அதிகரித்துச் செல்லும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த கொரோனா சிகிச்சை விடுதிகளை மீளவும் இயக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்று அபாயம் அதிகரிக்கும் நிலையில் எடுக்கப்படவேண்டிய முன் ஆயத்த நிலைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் ஆராயப்பட்டதாக கூறப்படுகின்றது. போதனா வைத்தியசாலையில் கொரோனா...
நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போலவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வார்டுகள் தற்போது மற்ற நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் கொள்ளளவை தாண்டிச் செல்வதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. பொது பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும்...
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம்(புதன்கிழமை) மேலும் 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 4 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 16 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள்...
தென்னிலங்கைக்கு பொதுப் போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்புவோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரவலாகக் கண்டறியப்படுகிறது என்று சுகாதார அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருவோரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பெருமளவானோர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை தகவல்கள் குறிப்பிட்டன. தென்னிலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும்...
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவ சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனை கூறினார். சீனாவில் அதிகளவான இரசாயன உரங்கள் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படுவதாகவும்...
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 877 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 2 ஆயிரத்து 763ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 76 ஆயிரத்து 324 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு...
அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. அனைத்து வயதினரிடையேயும் கொரோனா தொற்று விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள்...
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் நாளாந்தம் மின்தடையினை அமுல்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் எரிசக்தி...
நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரிகரித்துள்ளது. இதே நிலைமை தொடருமானால் பாடசாலை கட்டமைப்பு முழுமையாக சரிவடையும். எனவே பாடசாலைக்கு அழைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில...
யாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் எனச் சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி...
நாட்டில் ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. அதற்கமைய, மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு இனிவரும் நட்களிலும் மின் துண்டிப்பு ஏற்படுமென அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படக்கூடிய நேரம் மற்றும் இடங்கள் தொடர்பான...
நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மணிநேர மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு அட்டவணையைப் பார்க்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்க. power cut schedule
அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின்...
யாழ்ப்பாண நகர எல்லைக்குள் ´எனோபீலிஸ் டிபென்ஸி´ எனப்படுகின்ற புதிய வகை மலேரியா நுளம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மிகவும் அனர்த்த நிலை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ. கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தென்ஆபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு...
யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என சாரப்பட – மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்குத்...
பொது இடங்களில் நடமாடுபவர்கள் கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசியை அனைவரும்...
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது. சுக்கான தடி உடைந்தமையினால் இடைநடுவில்...
இலங்கையில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திகக்கூடிய கொரோனா தொற்றின் மாறுபாடாக இது மாற்றமடையலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் நதீகா ஜனகே இதனை...
Loading posts...
All posts loaded
No more posts