- Saturday
- January 11th, 2025
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூவில் உள்ள வீடொன்றில் வசித்த வயோதிபப் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்கிழமை நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) என்ற வயோதிபப் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை...
நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவே மின்வெட்டுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு கூறியது. அதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய...
பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின்...
நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதை மாற்றியமைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அதற்கமைய, இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இலகுபடுத்தும்...
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று காலை 8.30 மணி முதல் இரவு 5.30 மணி வரையான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின்...
நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் அமுலாகும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு உள்ளடங்களாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருக்கு தட்டுப்பாடு...
எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் நோயாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பிறழ்விற்கான அறிகுறிகள் தென்படாத காரணத்தினால் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர்...
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தபோதும் விரைவில் எரிபொருள் விலையை நிச்சயமாக அதிகரிக்கவுள்ளதாக மின்சார சபையின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். அதேநேரம், மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே வெற்றிபெற வேண்டும் எனவும் இன்று...
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு குறித்து இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்துள்ளன. இதன்போதே, விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது எனவும் இது ஆரோக்கியமானது அல்ல எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். நேற்றையதினம் (08) யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது....
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 22 பேரும் பெண்கள் 13 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 656ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை...
தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கொட்டனால் தாக்கப்பட்டு இன்னொருவருமாக இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி...
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் இதுவரை கொரோன தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 18 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கான மேலும் 23 பேர் நேற்று...
யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று மீனவர்களுடன் பேச்சுக்களை நடத்த முயற்சித்தபோது, மீனவர்கள் சமரசத்திற்கு சம்மதிக்காத நிலையில், அமைச்சர் திரும்பி சென்றுள்ளார். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிவரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர...
நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் நிலைமை தீவிரமாக அதிகரித்துச் செல்கிறது. சமூகத்தில் அறிகுறிகளின்றி பெருமளவான தொற்றாளர்கள் காணப்படுகின்றனர். நாட்டில் அடுத்த கொவிட் அலை உருவாகியுள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். எனவே தற்போது சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைபிடிக்காவிட்டால் பாரதூரமான நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள்...
கொரோனா நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வார இறுதியில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவல் வீதத்தில் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு, ‘சமூக பரவல்’ என்ற வார்த்தையின்...
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 11 ஆயிரத்து 185ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 432 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,...
”கிட்டுபூங்கா பிரகடனம்” இனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. ‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த பேரணியின் நிறைவிலேயே ”கிட்டுபூங்கா பிரகடனம்” இனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள். கிடைக்காது...
Loading posts...
All posts loaded
No more posts