- Saturday
- January 11th, 2025
ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினரே...
நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் , கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கனிசமானளவு குறைவடைந்துள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரு கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டமையே இதற்கான காரணமாகும் என்று விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்...
லங்கா IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு வெளியில் நடக்கும் விடயங்கள் காரணமாகவே இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக...
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது, நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக Petrol...
களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் GT-7 இன் ஒற்றை மின் உற்பத்தி அலகு மூடப்பட்டுள்ளது. டீசல் இல்லாத காரணத்தினால் இன்று(வியாழக்கிழமை) காலை திடீரென மூடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார். GT-7 ஆலையின் செயல்பாடுகள் காலை 7:21 மணிக்கு திடீரென நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார். அனல்மின் நிலையம் நிறுத்தப்பட்டதால், தேசிய...
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் (08) மகளிர் தினத்தை துக்க தினமாக கடைபிடித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம்...
இலங்கை கால்பந்து அணி வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல் நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் பொது சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது. இலங்கை கால்பந்தாட்ட அணியில் விளையாடும், டக்சன் பியூஸ்லஸ், மாலைதீவில் கழகமொன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் விளையாடி வந்தநிலையில் கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்திருந்தார். மன்னார் பனங்கட்டுகொட்டு கிராமத்தைச் சேர்ந்த பியூஸ்லஸ், பருத்தித்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர்....
யாழ்ப்பாணத்தில் இரத்தக் கரையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இனங்காணமுடியாத நிலையில் நபர் ஒருவரின் சடலம் காயங்களுடன் காணப்படுகின்றது. இவ்வாறு காணப்படும் உடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மரணம் விபத்தா அல்லது...
கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 05 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இது தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளாவன, கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள் சுகாதார ஊழியர்களால் சீலிடப்பட்டு, சவப் பெட்டியில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளதுடன், மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பொறுப்பேற்றுள்ளார்.ஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில்...
வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்குமாறும், வெங்காயம் மற்றும் சிறு தானிய செய்கையாளர்கள் விதைத்தல் மற்றும் அறுவடை செயற்பாடுகளை தவிர்த்து கொள்வது சிறந்தது எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான...
நாடளாவிய ரீதியில் இன்றும்(வியாழக்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 05 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மாலை 06 மணியிலிருந்து இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்...
நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மக்களுக்கும் உறுதியளித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, மின் உற்பத்திக்கான எரிபொருளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வதற்கு வசதி செய்து தருமாறு திறைசேரி மற்றும்...
நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதியினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. அதன்படி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை சுழற்சி முறையில் 5 மணிநேர மின்வெட்டும், மாலை 6.00 மணி முதல்...
தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஆகவே பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியம் என சுட்டிக்காட்டினார். மேலும், டொலர்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 977 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 645,037ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 20,128 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன்.”இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை (பெப்.22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்றையதினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த...
நாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி A,B,C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேபோல ஏனைய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில் 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்...
சுழற்சி முறையில் இன்றைய தினமும் (வியாழக்கிழமை) நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய நாளைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. ஏனைய...
Loading posts...
All posts loaded
No more posts