- Saturday
- January 11th, 2025
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காலை வரையிலும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கின்றமையை சமூக ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் நேற்று இந்தப்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் இல்லை, சுகாதார கட்டமைப்பு சீர்குலைவு, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். அரசாங்கத்தின்...
எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தில் இருந்து கீழே இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த போது பேருந்தின் சில்லு ஏறியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு (05) 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது 37) என்பவரே உயிரிழந்தார். “உயிரிழந்தவர் வயாவிளான்...
இலங்கையில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை அடுத்து, மக்கள் போராட்டங்களை அடுத்து அதி விசேட வர்தமானிமூலம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் 05.04.22 நள்ளிரவு முதல் மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரசுரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை...
தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் சிந்திக்கிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும்...
நுகேகொட – மிரிஹான பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2...
எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர்...
சில நாட்களேனும் நாட்டை முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொழும்பினை தலைமையகமாக கொண்ட தமிழ் ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின் வெட்டினை வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது....
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை...
தற்போதைய நிலையில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை அறிவித்துள்ளார். மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , பொலிஸ் உத்தியோகஸ்தரின் கோண்டாவில் வீட்டினுள் நேற்று (27) மாலை 10 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து...
புத்தூர் மேற்கு, நவக்கரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தூர் மேற்கு, நவகரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞரே நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த...
நாட்டில் மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாகவே இந்த நிலை ஏற்படக்கூடும் என கூறப்படுகின்றது. இதற்கமைய தற்போது அமுல்படுத்தப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள்...
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஜனாதிபதி செயலக பிரிவின் ஊடாகவும், அமைச்சுக்கள் ஊடாகவும் செயற்படுத்த முறையான செயலொழுங்கினை முன்னெடுப்பேன். சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்த அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களின் யோசனைகளை எந்நேரத்திலும் என்னிடம் முன்வைக்கலாம். நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு என ஜனாதிபதி கோட்டாபய...
மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் சில மருந்துப் பொருட்கள்...
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இந்த இரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. கண்டி மற்றும் கடவத்தை பகுதியில் இந்த இரு சோக சம்பவங்களும் பதிவானதாக அவ்வந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸார் உறுதி செய்தனர். கண்டி - யட்டி நுவர...
இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். அரசாங்க மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அரசாங்கம் வழங்காவிட்டால் இந்த நிலை ஏற்படும் எனவும் அவர்...
யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...
ஒருலட்சம்தானா எனது பிள்ளையின் பெறுமதி? அவ்வாறு எனது பிள்ளையை பெறுமதி தீர்க்க இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது? என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி இராமநாதன் கோகிலவாணி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு...
Loading posts...
All posts loaded
No more posts