மின்தடை, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்!! – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!!

அரசியல் உறுதித்தன்மையை உடனடியாகக் கொண்டுவருமாறு அனைத்து அரசியல் தலைவர்களையும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொள்கிறார். இப்போது அது நடக்கவில்லை என்றால், மக்கள் தினமும் 10-12 மணிநேர மின்தடை, அதிக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய தட்டுப்பாட்டை அடுத்த வாரம் எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார். “இந்த நேரத்தில் எந்த இறக்குமதி பொருள்களிலும் பணத்தை...

மீண்டும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
Ad Widget

பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்!!

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளனர். வன்முறையை ஆதரித்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்வாக சேவைகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தருணத்தில் நாடு அராஜகமாகி விடுவதைத் தடுக்க உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு...

அசனி சூறாவளி தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 680 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது

மேற்கு மத்திய மாகாணத்தில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த அசனி சூறாவளி தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 680 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்வதாகவும் நாளைய தினம் சூறாவளியாக வலுவிழக்க கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 90 கி.மீ...

வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துங்கள் – ஜனாதிபதி கோட்டா பகிரங்க கோரிக்கை

மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பலவேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க...

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த!

பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவிய இராஜினாமா செய்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்!

மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்ப்பட்டுள்ளது. இதேவேளை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம் குவிப்பு!! இராணுவத் தளபதி களத்தில்!!

காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை விலக்கிக்கொண்டு இராணுவத்தினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த பகுதிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை கண்காணிப்பதுடன் நிமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர...

10 மணித்தியால மின்வெட்டு??? – இலங்கை மின்சார சபையின் விளக்கம்

நாட்டில் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார். எதிவரும் வாரம் முதல் 10 மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இலங்கை மின்சார சபையினால் அவ்வாறான...

பதவி விலகுவாரா மஹிந்த – இன்று முக்கிய அறிவிப்பு?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்தோடு, மாற்று அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதத்திற்கு உட்பட்டு பதவி விலகுவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தார் என்றும் தகவல் வெளியாகியிருந்தன....

2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால்...

இலங்கையின் கையிருப்பில் 50 மில்லியன் டொலர் கூட இல்லை!!

நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தாம் இந்த ஆட்சியை 2019ஆம் ஆண்டு ஏற்கும் போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் காணப்பட்டதாகவும், தற்போது பயன்படுத்தக்கூடிய வகையில்...

தொடர் வேலைநிறுத்தத்துக்கு தயாராகின்றன தொழிற்சங்கங்கள்!!

நாளைமறுதினம் நாடுமுழுவதும் நடைபெறவுள்ள முழுக்கடையடைப்பு மற்றும் 24 மணித்தியால கூட்டுப் பணிப்புறக்கணிப்புக்கும் உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் தொடர் கடையடைப்பை நடத்துவதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் செயலாளர் ரவி...

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிளின் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி

சமூக மற்றும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்ளிடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்றில் சுயாதீனமாக...

எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (திங்கட்கிழமை)...

மஹிந்த தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவுநேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் நாடாளுமன்ற...

பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!!

நாட்டில் பேருந்து சேவைகள் இன்று காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று அதிகாலை சேவைகள் இடம்பெற்ற போதும் காலை 6.30 மணிக்கு வந்த அறிவிப்பையடுத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. இன்று நாடுமுழுவதும் கடையடைப்புக்கு 300 தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்தன. இந்த நிலையிலேயே இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் 84 ரூபாயினாலும் டீசல் 113 ரூபாயினாலும் அதிகரிப்பு!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை திருத்தம் இன்று (ஏப்ரல் 19) முதல் நடைமுறைக்கு வரும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார். இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 84 ரூபாயினால் அதிகரித்து 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 90 ரூபாயினால் 373 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும்....

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 35 ரூபாயினாலும் டீசல் லீட்டர் ஒன்றின் விலையினை 75 ரூபாயினாலும் அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 338 ரூபாய்க்கும் ஒக்டேன் 95...

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 237 மருந்து வகைகள் தட்டுப்பாடு!!

அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் செயலாளர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ இந்தக் கருத்தை வெளியிட்டார். மருந்துப் பற்றாக்குறையால் அரச மருத்துவமனைகளும் தனியார் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இதய நோயாளிகள், இருமல்,...
Loading posts...

All posts loaded

No more posts