- Saturday
- February 22nd, 2025

வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை உடன் மீட்டுத்தருமாறு, பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் ரஷ்ய தூதரகம் அவர்களின் மகஜரை பெற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படையில் வலுக்கட்டாயமாகச்...

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம்...

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வருகின்ற யுத்தத்தில் புலம் பெயர்நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வலுக்கட்டாயாக இணைக்கப்படுவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவந்தன. இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது....

மாவீரர் வாரம் நேற்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்படுவது வழமை, அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை...

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்துக் கலந்துரையாடிய போதே குறித்த நிதித்தொகையினை வழங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான வனஜா என்ற இளம் தாயே நேற்றைய தினம்(19) செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சுத்...

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை. தேர்தலுக்கு பின்னர் எமது காரியாலயம் நிரம்பி வழியத் தொடங்கியது. இதன் பலன் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய...

யாழ் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி முதல் இருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது அதன்படி யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250...

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நம்பத்தகுந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைந்துள்ளமையினால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் எதிராக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக...

அடுத்த 24 மணி நேரத்திற்கு வௌியான எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (14) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது...

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ். நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணை நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற போது, 2011ஆம் ஆண்டு புலி...

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். பிரதான...

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 28ஆம்...

கொக்குதாெடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று கட்டமாக இடம்பெற்று 52 மனித எச்சங்கள் அகழ்ந்தெடடுக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனித...

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத்...

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், வைத்தியர்கள் பங்கேற்புடன் இன்று இடம்பெற்றது. இதன்போது கூட்டத்தில்...

கிளிநொச்சி – குஞ்சி பரந்தன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணம் செய்த டிப்பர் வாகனமொன்றை பொலிஸார் பல தடவைகள் நிறுத்துமாறு கூறியதாகவும், எனினும் குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றதால் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா நாளை காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர், இல்லையேல் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்....

All posts loaded
No more posts