- Sunday
- December 14th, 2025
ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம், திருநெல்வேலி – பாரதிபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளான். இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் அண்மையில் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளார். எனினும் நேற்று முன்தினமும் மீளவும் ஊசி...
கடந்த 16ம் திகதி டுபாயின் கோரல் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பலை விடுவிக்க தேவையான 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இல்லாத காரணத்தினால் இன்னும் இறக்கப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தாமதக் கட்டணம், துறைமுகக் கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணம் என்பனவற்றுக்கு...
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்க சென்று இராணுவத்தினர் தமது புகழை இல்லாதொழித்துக்கொள்ள வேண்டாம். ஆகஸ்ட் 09 ஆம் திகதி சகலரும் கொழும்பில் ஒன்றிணைந்து மக்கள் போராட்டத்தின் பலத்தை ஜனாதிபதிக்கு கற்பிக்க வேண்டும். பிரதமர் தினேஷ் குணவர்தன பதில் ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது என பீல்ட் மார்ஷல்...
மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்த மின்வெட்டு நேரம் மூன்று மணித்தியாலங்களை விடவும் விரைவில் அதிகரிக்கப்படலாம் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை இடையறாது விநியோகம் செய்வதற்கு போதியளவு எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது. மக்கள் நினைப்பதனை விடவும்...
இன்னும் ஒரு தடவை இவ்வாறான ஒரு வன்முறை சம்பவம் நடைபெறுமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் உதவி ஒன்றும் இலங்கைக்கு வழங்கப்படாது என ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட எழுத்துமூலமான உறுதிப்பாட்டின் உள்ளடக்கம் வெளியாகியுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கீழ்வரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரும், தாம் பதவிக்கு வந்து, மூன்று தொடக்கம் ஆறு மாத காலம் முடிவடைவதற்குள் குறித்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி...
வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்வரும் 21 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்துக்கமைய, எரிபொருள் வழங்கப்படும் நாட்களில் இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, 0,1,2 ஆகிய இலக்கங்களுக்கு செவ்வாய்...
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக...
ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ட்விட்டர் செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டார். ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை கருத்திற்கொண்டு, மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும், உறுதி...
எரிபொருளுக்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ் தெரிவித்தார். இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் தினம் குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கு...
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக அழுத்தம் கொடுக்கும் முகமாக எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாளை 19ஆம் திகதியை எதிர்ப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று முதல் தமக்கு...
எதிர்வரும் 21ம் திகதி முதல் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. எனவே, அதுவரை வாகனங்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என மக்களிடம் அந்தக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கு அமைய,...
ஸ்திரமான அரசாங்கமொன்றை ஏற்படுத்தாவிட்டால் நாடு முற்றாக முடங்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். அவசியமானபெட்ரோலிய இறக்குமதிக்கான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து பெரும் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசமீட்பு நிதியை பெறுவது என்பது ஸ்திரமான அரசாங்கத்திலேயே தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிய பொருளாதார நெருக்கடி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர். சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை காரணமாக பயணம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஜனாதிபதி தனி...
அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் அரசியலமைப்பின் ஊடாக மக்களின் கருத்துகளையும் கேட்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பின்படி செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புக்கு...
ராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் பிபிசி ஊடகத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இல்லை என்றும் அருகில் உள்ள நாடொன்றில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார்....
நாட்டிலுள்ள லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவிக்கையில், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதனை இன்றும் ( 8 ) மற்றும் நாளையும் ( 9 ) பாதுகாப்புக் காரணங்களுக்காக இடைநிறுத்த தீர்மானித்துள்ளோம்....
அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்வதற்கான வசதிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி… https://ceypetco.gov.lk/usd-consumer-online-registration/
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக்கோரியாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ்.நகர் நோக்கி நாளை துவிச்சக்கர வண்டிப் பேரணியொன்றை மேற்கொள்ள சில பொது அமைப்புகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள்...
Loading posts...
All posts loaded
No more posts
