- Saturday
- January 11th, 2025
எதிர்வரும் 21ம் திகதி முதல் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. எனவே, அதுவரை வாகனங்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என மக்களிடம் அந்தக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கு அமைய,...
ஸ்திரமான அரசாங்கமொன்றை ஏற்படுத்தாவிட்டால் நாடு முற்றாக முடங்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். அவசியமானபெட்ரோலிய இறக்குமதிக்கான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து பெரும் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசமீட்பு நிதியை பெறுவது என்பது ஸ்திரமான அரசாங்கத்திலேயே தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிய பொருளாதார நெருக்கடி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர். சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை காரணமாக பயணம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஜனாதிபதி தனி...
அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் அரசியலமைப்பின் ஊடாக மக்களின் கருத்துகளையும் கேட்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பின்படி செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புக்கு...
ராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் பிபிசி ஊடகத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இல்லை என்றும் அருகில் உள்ள நாடொன்றில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார்....
நாட்டிலுள்ள லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவிக்கையில், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதனை இன்றும் ( 8 ) மற்றும் நாளையும் ( 9 ) பாதுகாப்புக் காரணங்களுக்காக இடைநிறுத்த தீர்மானித்துள்ளோம்....
அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்வதற்கான வசதிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி… https://ceypetco.gov.lk/usd-consumer-online-registration/
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக்கோரியாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ்.நகர் நோக்கி நாளை துவிச்சக்கர வண்டிப் பேரணியொன்றை மேற்கொள்ள சில பொது அமைப்புகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள்...
நாட்டில் ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது நாட்டின் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன, சஜித் தரப்பினர் உடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை. நாட்டை கட்டி எழுப்புவதுற்கு நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஸ்திரமான சர்வ கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதே நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது...
கொரோனா வைரஸின் பதிய திரிபு மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி...
எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் உயர்மட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும், அதனூடாகவே சர்வதேசம் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை விடுத்து வரும்...
எரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் விடுத்துள்ளார். திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது...
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. லங்கா ஐஓசி நிறுவனம் நேற்றையதினம் (ஜூன் 30) திருகோணமலை முனையத்தில் இருந்து எரிபொருளை விடுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அந்த எரிபொருள் இருப்புகளைப் பெறும் நிரப்பு நிலையங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது....
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகள் 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளன. அரசாங்கத்திடமுள்ள மிகக் குறைந்தளவிலான எரிபொருள் இருப்பினை அடுத்த கப்பல் வரும் வரை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து ஏனைய துறைகளைச் சேர்ந்த மக்கள்...
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக மக்கள் எழுச்சி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதற்கான சேவைகள் என அவர் கூறியுள்ளார். பிரச்சினைகள் தீவிரமடைந்தால் மட்டுமே அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் தீர்வுகளை தேடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்....
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால்...
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசன்ன கொலம்பகே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்....
மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாயினை முன்மொழிந்திருந்தது. அத்துடன், 1 தொடக்கம் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார...
யாழ்ப்பாணம் மாநகர் மகாத்மா காந்தி (மணிக்கூட்டு) வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவ சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அழைத்து வரப்பட்டிருந்த சிலரே இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதாக அவரது ஊரவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உடனடியாக...
தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத் தூண்டப்படுவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
Loading posts...
All posts loaded
No more posts