- Friday
- January 10th, 2025
ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது. நாட்டில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கி பிரயோகங்களை தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக மக்கள் போராட்டத்தை முடக்க ஆயிரகணக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுப்படுத்தப்படுகிறார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1)...
கீரிமலை ஊடான பொன்னாலை - பருத்தித்துறை வீதியினை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கடந்த 30 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் குறித்த வீதி காணப்பட்ட நிலையில் கடந்த நல்லாட்சி கால பகுதியில் அப்பகுதி மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு வீதியும் திறந்து...
பொருட்கள் விற்பனை, உற்பத்தி மற்றும் இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு நபரும் கோரும்...
நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 3 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 1 ஆணும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும் 70 பேருக்கு கொவிட் தொற்று...
வெளிநாட்டு பணியாளர்கள் ஈட்டும் வருமானத்தை டொலரில் இலங்கைக்கு அனுப்பாமல் வெளிநாடுகளில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியும் பொலிஸாரும் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உண்டியல், ஹவாலா போன்ற முறைகளில் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாறிக்கொண்ட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்...
நாட்டில் 91 மிகவும் அவசியமான மருந்துபொருட்களின் கையிருப்பு முற்றாக தீர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மருத்துவ களஞ்சியத்தில் கடந்த வாரம் இந்த நிலை காணப்பட்டதாக அரசாங்க மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால்...
இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கருத்தில்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய்...
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதம தொற்று நோய் விசேட நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் ஊடாக கொரோனா பரலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக...
இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்து நேற்றுமுன்தினமும் நேற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலையை சேர்ந்த 06 குடும்பங்கள் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். குறித்த 06 குடும்பங்களை சேர்ந்த...
நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 9 அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு பாடுபட வேண்டும். அவ்வாறு பாடுபட முடியாது எனக் கூறுபவர்கள் வீட்டுக்குச் செல்லலாம். எந்தவொரு வேலைகளிலும் ஈடுபடாதவர்களுக்கு சம்பளத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அநுராதபுர மாவட்ட அபிவிருத்தி சபை...
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். நிலவும் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளைப் பெறுவதற்காக வாகனங்கள் இரண்டு அல்லது மூன்று நிரப்பு நிலையங்களுக்குச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதியளவு எரிபொருள் இருப்பதாக கூறும் அமைச்சர்...
யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இந்த கைது...
காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். கல்முனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,...
யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணே நேற்றிரவு உயிரிழந்தார். கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. நீண்ட நாள்களுக்கு பின் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தகவல்கள்...
கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 7 நாட்களில் ஆயிரத்து 197 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 68 ஆயிரத்து 141...
இன்று முதல் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A முதல் W வரையான வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5...
நாட்டில் 200 க்கும் அதிக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு தொடர்ந்தும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுமாயின் நாடு மோசமான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல...
ஊடகவியலாளர் என அடையாளம் காட்டி, உள்நாட்டு விசாரணையை வலியுறுத்த கோரியோர் விரட்டியடிக்கப்பட்டனர். கிளிநொச்சியில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் போராட்டம் ஆரம்பமாகவிருந்த இடத்தில் இவ்வாறு தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளம் காட்டி, போராட்டத்தை திசை திருப்ப முற்பட்டவர்களே இவ்வாறு காணாமல்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினாலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்தக்...
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களில் சிலரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த நபர்கள் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர் . இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனாத் தடுப்பூசியை ஒரு வருடத்துக்கு முன்னர்...
Loading posts...
All posts loaded
No more posts