வடக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எச்சரிக்கை!

வடக்கில் சட்ட விரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வட மாகாணத்தை முடக்கி மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்ன ராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நேற்று (திங்கள்கிழமை) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்...

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை மக்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக்கொடுக்காது – சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்தாத தீர்மானங்களைத்தான் இந்த பேரவைக்கு நிறைவேற்ற முடியும். அதனால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மூலம் எமது மக்களது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைக்கொடுக்காது. என்றாலும் இந்த பிரேரணை இலங்கைக்கு மிகவும் சவால் மிக்கதானதாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்...
Ad Widget

ஜப்பான் வாகன விவகாரத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை: மணிவண்ணன்

கழிவகற்றல் வாகனங்களுக்கான இறக்குமதிக்கான செலவு நிதியை மீளப் பொறுப்பேற்குமாறு இப்போதைய பதில் முதல்வர் ஈசன் காலத்தில் யாழ்.மாநகர ஆணையாளர் ஜப்பான் தூதரகத்துக்கு எழுத்து மூலம் கடிதம் எழுதினார் என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் மாநகர சபையின் முதல்வர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

யாழ். மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு!

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால், யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது. கடந்த 2020ஆம் ஆண்டு யாழ். மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்புப் படை வாகனம் விபத்தில்...

மீண்டும் எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பா?

இன்றைய தினம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் இது குறித்த அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இலங்கை பெற்றோலிய விநியோகஸ்த்தர் சங்கத்தினர் இன்றைய தினம் சேவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்....

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள்!

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். எட்டு சதவீதமாக இருந்த வட் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இரண்டரை சதவீத சமூக...

வடக்கில் சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பொருளாதார நெருக்கடியின் தீவிரம் மற்றும் வீட்டு நிதி பற்றாக்குறை காரணமாக வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் வழங்கிய புள்ளிவிபர தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில், 246 சிறுவர்கள் வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகி திலீபனின் 35 ஆவது ஆண்டு அஞ்சலி நாள்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை...

கசூரினா கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிமீது பாலியல் துன்புறுத்தல்!! ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்!!

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில், ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டும் போது சந்தேகநபர்கள் அனைவரும் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு...

இலங்கையில் தினமும் 12 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தலாம்!

இலங்கையில் மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெட்ரிக் தொன் நிலக்கரி உள்ளது.கையிருப்பில் உள்ள நிலக்கரி ஒக்டோபர் 28 ஆம் திகதி...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் எழுச்சிபூர்வமாக இடம்பெறும்- மணிவண்ணன்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை சற்று சீராகக் காணப்படுவதால், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை...

தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பு! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

முல்லைத்தீவு - தண்ணீர்முறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உட்படுவதாக தெரிவித்து தண்ணிமுறிப்பு கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்ததோடு கவனயீர்ப்பிலும் ஈடுபட்டது. இதன்போது வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம், பிரிக்காதே பிடிக்காதே தமிழர் தாயகத்தை பிரிக்காதே, குருந்தூர் மலை...

சிறுமிகளை வன்புணரும் கூடாரமாக யாழ். கோட்டை! மாவட்ட செயலகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணத்திலிருந்து தீவுப்பகுதிக்குச் செல்லும் பிரதான மார்க்கமான பண்ணைப் பாலத்தின் கீழ் பகுதி மற்றும் கோட்டைக்கு வெளியேயுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என யாழ். மாவட்ட செயலகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முனியப்பர் ஆலயத்துக்கு பின்புறமாகவும், கோட்டைக்கு வெளியேயும் உள்ள பகுதியிலேயே பாடசாலை சிறுமிகள் பலர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். காதலர்கள்...

சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம்

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும்...

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் இன்று ஆரம்பம்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின....

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என எச்சரிக்கை!

பலவீனமான விவசாய உற்பத்தி, விலைவாசி உயர்வு மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் எச்சரித்துள்ளன. 6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், போதுமான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை...

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்

நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தண்டனையிலிருந்து விடுபடுவதை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆழமான நிறுவன,...

இலங்கைக்கு கிடைக்கும் பல கோடி அமெரிக்க டொலர்கள்!

சமூர்த்தி பயனாளிகள், வயோதிபர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான இந்த வருட கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் ஐயாயிரத்து 200 கோடி ரூபாவை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 14 கோடி 50 இலட்சம் டொலர்கள் இந்த வருடத்தின் முதல் ஆறுமாத கால பகுதியில் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகவும் இது தவிர ஆசிய...

தொலைபேசி சேவைக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி, லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்கள் மற்றும் பிற ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட்...
Loading posts...

All posts loaded

No more posts