- Saturday
- April 19th, 2025

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம் பெற்றுள்ளதுடன் ஒரு வாரகாலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறது....

கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது. கிரிப்டோகரன்சியின் பயன்பாடு சில தரப்பினரால் இலாபகரமான முதலீடாக விளம்பரப்படுத்தப்படுகிறது, மேலும் இதுபோன்ற முதலீடுகளால் மக்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நிதி மோசடிகள் விரைவான வளர்ச்சியைக் காட்டுவதால், தங்கள்...

எரிபொருள் விலை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை...

இலங்கையில் இன்று முதல் கடமைக்கு சமூகமளிக்காத எரிபொருள் நிலைய பணியாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிறுவனங்கள் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்த தொழிற்சங்க தலைவர்கள் உட்பட அனைத்து பெட்ரோலிய கூட்டுத்தான...

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் , அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோக சந்தையில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர்...

வடமாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் ஆண்டுகளில் சுமார் 103 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் 49 பாடசாலைகளும்,...

முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லையில் உள்ள தமிழ் கிராமமான கொக்குத்தொடுவாய் கிராமத்தின் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை சுவீகரிக்கும் நோக்கோடு அளவீடுகளை செய்து காணிகளுக்கு நடுவே எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நில அளவை திணைக்களம் காணி...

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டுக்கும் இடையில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்தார்....

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை...

யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை உயிரிமையாளர் ஒருவரும் குறித்த கடையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவரும் உயிரை மாய்த்துள்ளனர். நேற்று காலை யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். அதனை தொடர்ந்து நேற்று மதியம் குறித்த நகைக்கடை உரிமையாளரும் உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்த இருவரது சடலங்களும் யாழ்.போதனா...

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு , அப்பகுதிகளில் துப்பாக்கி சன்னங்களின் வெற்றுக்கோதுகள் காணப்படுகின்ற போதிலும் , பொலிஸார் தாம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என தெரிவித்துள்ளனர். அவ்வாறாயின் யார் துப்பாக்கி சூடு நடத்தியது எனவும் ? பொலிஸார்...

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு உற்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவு இல்லாமல் 13 ஆயிரத்து 888 பேர் இருப்பதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் போதிய உணவில்லாமல் இருப்போர் பட்டியலில் ஊர்காவற்துறை பிரதேச செயலகம் 2 ஆயிரத்து 966 பேருடன் முதலிடத்தையும் இரண்டாவது இடத்தை 2ஆயிரத்து 618 பேருடன்...

வவுனியாவில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

கீரிமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று ஆலயத்தின் தற்போதைய நிலையை பார்வையிட்ட போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கீரிமலை சிவன்...

வவுனியா குட்செட்வீதி,உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்ப்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த...

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்கின்ற நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் எச்சரிக்கை விடுத்தார். கடந்த சனிக்கிழமை யாழ் உரும்பராயில் இடம் பெற்ற ஞான வைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் பொருட்கள் வழங்கும்...

யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது. அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி, இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின் அளவு நேற்று (28) காலை 101 முதல் 150 வரை இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இது உணர்திறன் உள்ளவர்களுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளை...

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் முன் மொழியப்பட்டது. இதற்கு சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு செலவு திட்டத்திற்கு...

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய இன்று (செவ்வாக்கிழமை) இது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் பணிப்புறக்கணிப்பு காரணமாக அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள...

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும்...

All posts loaded
No more posts