- Sunday
- April 20th, 2025

தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது. வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, யாழ்.கலாச்சார பேரவை, யாழ்.மாவட்டச் செயலகம் இணைந்து நடத்திய யாழ்.பண்பாட்டு பெருவிழா நேற்றுகாலை 9 மணிக்கு ஆரம்பமானது. யாழ். மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தலமையில் நடைபெற்ற இப்பண்பாட்டு பெருவிழாவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம...

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று சனிக்கிழமை மாலை யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய மாணவர்கள் சிலர் அங்கு பிரத்தியேகமான இடம் ஒன்றில் திலீபனின் உருவப்படத்துக்கு மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்...

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் கல்லுாரியின் 125 வது ஆண்டு நிறைவை முனை்னிட்டு இன்று(26) இரத்ததானம் இடம்பெற்றது இதில் பெருமளவில் பழையமாணவர் பங்கேற்றனர். நிகழ்வு ஆறு திருமுருன் , சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகியது . இன்றைய நாளில் விழாக்கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இந்த இரத்ததானம் மட்டும் நிகழ்ந்தது....

'பஞ்சவர்ண நரியார்' சிறுவர் நாடகம், எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் மேடையேறவுள்ளது. குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய இந்த நாடகத்தை செயல்திறன் அரங்க இயக்கம் தயாரித்துள்ளது. நல்லூர் நாடகத் திருவிழா 2015இல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்...

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கடற்கரையோராங்களை பாதுகாத்தல் சம்பந்தமான விழப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்புறமாக இந்த விழப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர்...

சர்வதேச விசாரணை பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தும் நடை பயணம் கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பு ஏ9 வீதியில் ஆரம்பமாகியது தொடர்ந்து இன்று 4 ஆம் நாள் யாழ்பாணத்தினை வந்தடைந்துள்ளது. சற்றுமுன்னர் செம்மணியினை வந்தடைந்து மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் தொடர்கிறது. இன்று பிற்பகல்...

உலக சிறுவர் தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்று சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் சிறுவர் தின நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டது. வித்தியா என்ற பாடசாலை மாணவியின் மரணம், வடக்கில் இடம்பெற்று வரும் அதிகளவான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் போன்ற காரணிகளினால் பிரதேச சிறுவர்...

யாழ் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் போரா முஸ்ஸிம் இனத்தவர்களின் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முதற்தடவையாக போரா முஸ்ஸிம் இன உலகத்தலைவர் செரன முகியதீன் சையூதீன் நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்தார். அவர் இன்று யாழ் ஆஸ்பத்திரி வீதியில் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போரா முஸ்ஸிம் பள்ளிவாசலை திறந்து வைத்தார். இப்பள்ளிவாசல்...

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாணவர்களின் நூற்றாண்டு விழாப் பேரணி இடம்பெற்றது. இன்று 09.09.2015 புதன்கிழமை காலை 7 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி 9.30 மணியளவில் நிறைவடைந்தது. 1915 – 2015 நூற்றாண்டு விழாவை பொதுமக்களுக்கு அறியத் தரும் முகமாக அலங்கரிக்கப்பட்ட ஊர்தி முன்னே செல்ல மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று புதன்கிழமை (02.09.2015) ஆரம்பமாகியுள்ளது.நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்துள்ளார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற விவசாயச்...

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு விழா யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் கடந்த 29.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவரும் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சு.கபிலன் தமிழ்த்தெய்வ...

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப்பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் அமைந்திருக்கும் வைரவர் ஆலயத்தில் 33 வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் சனிக்கிழமை (29.08.2015) வழிபாடு இடம்பெற்றுள்ளது. ஊரவர்களால் 'ஜயன்' என்று அழைக்கப்படும் இந்த வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விசேட மடைப்பொங்கல் நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் க. சிவநேசன் ஆகியோரும்...

சிறுவயது முதலே பொதுப்பணிகளில் ஈடுபட்டு, இலட்சிய தாகத்தை வளர்த்துக்கொள்பவர்கள் பின்னாளில் அனைவராலும் போற்றப்படும் தலைவர்களாக உருவாகிறார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாகவும் பரிணாமிப்பது உண்டு. இதற்கு அமரர்,மாமனிதர் சிவமகாராசா ஓர் உதாரணம். ஆனால், இன்று அரசியல்வாதிகள் பெரும்பாலும் உருவாக்கப்படுகிறார்கள் என்று வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அமரர் சி.சிவமகாராசா கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதோடு, இரண்டு...

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழா நேற்று வெள்ளிக்கிழமை (07.08.2015) மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. நேற்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று தினங்கள் யாழில் தொடர்ச்சியாகக் குறித்த விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . நேற்று மாலை கே.ஆர். சுந்தரமூர்த்தி குழுவினரின் மங்கள இசையுடன் விழா...

ஈழத்தின் முதல் தமிழ்ப் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரிய பிரபாலினி பிரபாகரனின் ‘குயின் கோப்ரா' இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன், பாடகர் மாணிக்க விநாயகம், ஸ்ரீகாந்த் தேவா, பரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குயின் கோப்ரா இசை ஆல்பத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன....

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று வியாழக்கிழமை (30.07.2015) ஆரம்பித்து வைத்துள்ளார். வட்டு கிழக்கு சித்தங்கேணியில் இயங்கும் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பெண்களுக்கான ஒரு தொழில் முயற்சியாகவே இந்த இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டுறவு...

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி தொடர்பான ஆய்வரங்கு செவ்வாய்க்கிழமை (28.07.2015) யாழ் நகரில் உள்ள கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றுள்ளது. வடமாகாண கூட்டுறவு அமைச்சு கடந்த 22 ஆம் திகதி தொடங்கி 28 ஆம் திகதி வரையான பனை அபிவிருத்தி வாரத்தில் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே,...

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான திரு. ஏ.பி.ஜே.அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நேற்று (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலை கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை பல்கலைகழக வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பல்கலை கழக மாணவர்கள் கலந்துகொண்டு மறைந்த பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவரின்...

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியை மட்டும் ஒரே நோக்கமாக கொண்டு இயங்குகின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கலை ஆர்வலர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஒன்றிணைவில் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த வருடம் சித்திரை 5ம் திகதி கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடாத்திய 'கீத நிருத்திய சிருங்கார்'...

All posts loaded
No more posts