- Thursday
- April 3rd, 2025

தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தனது இன்னுயிரைத் தியாகம் செய்த அன்னை பூபதி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று 19-04-2017 மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அன்னையின் திருவுருவப்...

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று மாலை 4.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள்...

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் விரும்பியதை போன்று ஈழத்தில் எங்களை நாங்கள் ஆளும் ஆட்சியை வென்றெடுக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழகம் மற்றும் ஈழத்தின் இணைப்பு பாலமாக எம்.ஜி.ஆர். விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விசேட...

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தினால் (NCIT) ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களினை சேர்ந்தவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் 15.1.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் அதன் தலைவர் த.தவரூபன் தலைமையில் இடம்பெற்றது. இது வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தின் உறுப்பினர்களும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களும்...

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு புங்குடுதீவில் இயங்கி வரும் புங்கையின் புதிய ஒளி என்னும் இளைஞர் அமைப்பால் புங்குடுதீவில் பனம் விதைகள் நாட்டப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை (15.11.2016) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு முதல் பனம் விதையை நாட்டி, நடுகையைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புங்குடுதீவுப் பாடசாலைகளைச்...

அளவெட்டி வடக்கு கிராமியச் செயலகத்தின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வுகள் அண்மையில் கிராமசேவையாளர் க.கணேசதாஸ் தலமையில் நடைபெற்றன. இந் நிகழ்வில் அரச அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந் நிகழ்வுக்கு வலி வடக்குப் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஆன உதவிப்பிரதேச செயலர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த...

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்...

தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 29ஆவது தினமாகிய இன்றைய தினத்தில் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை பொதுமக்கள் சிலரால் மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் காலை 10 மணியளவில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக 12 தினங்களும்...

எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள். அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். போராட்ட காலத்தில் அவர்களது உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆனால், போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லையென்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். வவுனியாவில் கால்நடை உற்பத்தி...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (22.08.2016) ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தொடக்கி வைத்துள்ளார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும்...

புகழ்பெற்ற இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியொன்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ”நண்பேண்டா” என பெயரிடப்பட்டுள்ள குறித்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இசைக்கலைஞர் , இயக்குனர் , பாடகர் என பல முகங்களைக் கொண்ட கங்கை...

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பொது நூலகத்திற்கு அருகில் மிகவும் உணர்வு பூர்வமாக...

பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர். திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரக்கன்றுகளை நடுகை செய்துள்ளனர். பல்வேறு நாடுகளையும் சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ஐசெக் (AIESEC) எனப்படும் இவ்வமைப்பு அரச சார்பற்ற மற்றும்...

இவ்வாண்டுக்கான பசுமையான எதிர்காலத்தை நோக்கி சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் சர்வதேச அளவில் பிரபலமான நிபுணர்களின் பிரசன்னத்துடனும், இலங்கையின் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக நடாத்தி வரும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில், 2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாட்டின் கருப்...

நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கும் பிரதான தூண்களாக அரசதுறையும் தனியார்துறையும் விளங்குகின்றன. அத்தோடு, நாட்டின், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைத் தாங்கும் மூன்றாவது தூணாகக் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்துங்கள் என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகிழக்கு வடபகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் சர்வதேச கூட்டுறவு தினவிழா நேற்று வெள்ளிக்கிழமை (08.07.2016) கொண்டாடப்பட்டது. புத்தூரில் அமைந்துள்ள சங்க...

எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' நூல் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் ச.ராதேயன் தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் எஸ்.ஜீவசுதன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் ஆகியோர்...

இயக்குனர் கிருத்திகன் இயக்கத்தில் உருவான “இருட்டறை” குறும்படம் எதிர்வரும் 25ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரியில் வெளியிடபடவுள்ளது. இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றார்கள் இருட்டறை படக்குழுவினர்.

இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி டாக்டர் எ. பி. ஜே. அப்துல் கலாமின் திருவருவச் சிலை இன்று யாழ் பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த திருவுருவச் சிலையினை இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்கா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். யாழ் பொது நூலகத்தில்...

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தான் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக இன்று வெள்ளிக்கிழமை (17) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்துக்கான முதலாவது விஜயத்தை பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டுள்ளார். அண்மை காலங்களில் வடக்கு...

முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூல் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது. போரில் விழுப்புண் அடைந்து ஒரு கண்ணையும், ஒரு கரத்தையும் இழந்த பெண் போராளியான...

All posts loaded
No more posts