- Thursday
- November 21st, 2024
யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அது திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த போது, 160 கோடி ரூபா...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சமூகம் நடாத்தும் பொங்கல் திருவிழா 2020 எதிர்வரும் 15.01.2020 புதன்கிழமை அன்று கோலாகலமாக இடம்பெறவுள்ளது. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய பண்பாடு அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. காலை 10.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து சிலம்பாட்டம், பொய்க்...
தென்மராட்சி இலக்கிய அணி நடாத்திய கம்பன் விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல்-05.45 மணி முதல் யாழ். சாவகச்சேரி சங்கத்தானை தமிழ்க் கோட்டத்தில் இடம்பெற்றது. குறித்த விழாவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ‘அருட்செல்வர்’ எனும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்....
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளையோர் அணிதிரளும் பெருநிகழ்வு “கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019” ஒக்டோபர் 24, 25 ,26 ஆம் திகதிகளில் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வலியுறுத்தி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் இளையோர் அணிதிரள உள்ளார்கள். தென்னாசியாவில் டாக்கா, கராச்சி, ஐதரபாத், மும்பை போன்ற பெருநகரங்களின் வரிசையில் யாழ்ப்பாணமும் கிளைமத்தோனில் இணைகிறது. இலங்கையில் இருந்து...
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் இன்று முதல் எதிர்வரும் வெள்ளி வரையிலான காலப்பகுதியில் விவசாயக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின்...
மண்ணின் எல்லைகளைக் காப்பாற்றப் போராடிய மறவர்களை விடுதலைப் போராளிகள் என்று கொண்டாடுகின்றோம். அதேபோன்றுதான் மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்களும் போற்றப்படவேண்டியவர்கள். இவர்கள் விடுதலைப் போராளிகளுக்கு நிகரான பசுமைக் காவலர்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட...
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் கல்வி வலயத்திலுள்ள உயிலங்குளம் அ.த.க. பாடசாலைக்கு பான்ட் வாத்தியங்களும்,அலுமாரி,மாணவர்களுக்கான டினபோம் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்பட்டன. வன்னியிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஒன்றாகிய உயிலங்குளம் .அ.த.க.பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் குடும்பபொருளாதரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கனடா உறங்கா விழிகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் நிதி உதவி...
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று 02.11.2018 மாலை 5 மணியளவில் சபாபதி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பிரிகேடியர் சு.ப....
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியின் மக்களுக்கான உத்தியோகபூர்வ சேவைகள்’ வேலைத்திட்டத்தின் ஊடாக பல பொது சேவைகள் நிறைவேற்றப்பட்டன. இதன்போது, உத்தியோகபூர்வமாக பதிவுத் திருமணம் மேற்கொள்ளாத 18 தம்பதிகளுக்கு அரச செலவில் பதிவுத் திருமணங்கள் மேற்கொள்ளப்பட்டன. கோப்பாய் மற்றும் தெல்லிப்பளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உரிய முறையில் பதிவு திருமணத்தை மேற்கொள்ளாமல் வாழ்ந்து...
ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி என்னும் திட்டத்தின் மூலம் திட்டப்பட்ட நிதியிலிருந்து தாயகத்தில் வாழும் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால், கௌதாரிமுனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில்...
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்....
தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தையும், உலக தேனீக்கள் தினத்தையும் முன்னிட்டு முன்னெடுத்துள்ள தேனீக்கள் கிராமம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (05-06-2018) கோண்டாவிலில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது. மகரந்தங்களைக் காவுவதன் மூலம் இயற்கைச் சூழலுக்கும், விவசாயத்துக்கும் பாரிய பங்களிப்பைச் செய்துவருகின்ற தேனீக்கள், விவசாய இரசாயனங்களினாலும் நகரமயமாக்கலினாலும் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதனைக்...
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நாட்டும் நிகழ்வொன்றை வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் யாழ். மாநகரசபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. ‘மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். கோட்டையை அண்மித்த பண்ணை கடற்கரை பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது. வடமாகாண...
தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச படைகளால் புரியப்பட்ட இன அழிப்பின் 9ம் ஆண்டு நினைவையொட்டிய இரத்தான நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.05.2018) யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள நாவலர் மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இரத்தத்ததான நிகழ்வில் பெருமளவான...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 1974ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி யாழ் வீரசிங்கம்...
மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வட.மாகாணத்தினை மையப்படுத்தி ‘முன்னோக்கி நகர்வோம்’ எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்.கைலாசபிள்ளையார் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி வேலைத்திட்டம் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்செயற்திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்...
யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ்கண்காட்சி யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் K.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car போன்ற...
இறுதி யுத்தத்தில் தமது உயிர்களை நாட்டிற்காக தியாகம் செய்த முப்படையினரையும் கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் இன்று (04) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ். பலாலி படைத்தலைமையகத்தில் உள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் ரனவிரு சேவா சங்க தலைவி அனேமா பொன்சேகா மற்றும் வட மாகாண...
Loading posts...
All posts loaded
No more posts