- Thursday
- January 9th, 2025
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கடகிழமை) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை காலமும் பாடசாலைகளில் பகுதி பகுதியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் வழமை போன்று அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது....
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து துரித தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு கொவிட்...
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும். அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகியது. இந் நிலையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை...
2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக கூறினார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலை விடுமுறை வழங்கப்படும் என்றும்...
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கான கண் பரிசோதனை கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 370 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நாளன்று 320 மாணவர்கள்...
பாடசாலைகளுக்குள்ளும் கொரோனா கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை சகலரும் நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். “பாடசாலை கட்டமைப்புக்குள் நிர்வாகப் பிரிவினர்...
கோவிட்-19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள் சிலர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்று முறைப்பாடுகள் கிடைக்கின்றன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை சவக்காரம் இட்டுக் கழுவுதல்...
காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் தாக்கியுள்ளார். காதில் ஏற்பட்ட வலி காரணமாக மாணவன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்Lள்ளது. இதற்கமைவாக 2021 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள்...
இதுவரை ஆரம்பிக்கப்படாதுள்ள 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக புதிய சுகாதார விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியா் நிபுணர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானால் செயற்பட வேண்டிய விதிமுறைகள் உள்ளடங்கிய வழிமுறைகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரிப்பில் சில மாற்றங்களை கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட தடங்கல்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கு பொறுப்பான மேலதிக...
அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக செயற்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் நிறைவடையவிருந்த காலக்கெடு நவம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 7 முதல் மார்ச் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது....
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்படுகின்றன. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு கொரோனா தடுப்பு குழு அனுமதி வழங்கியது. அதற்கமைய, இன்று கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்...
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன. அதற்கமைய, தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவுகளை இவ்வாறு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பாடசாலை சீறுடைகளை அணிவது கட்டாயமில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் அதற்கமைய, வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகளே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டதாகவும் பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை...
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடமைக்கு சமுகமளிக்க அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இருப்பினும் எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி...
வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளது என்று மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அன்றைய தினமே முன்பள்ளிகளையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்....
Loading posts...
All posts loaded
No more posts