Ad Widget

பசுமை அமைதி விருதுப் போட்டியில் யாழ். இந்து மாணவனுக்கு தங்கப்பதக்கம்

கொழும்பில் அண்மையில் இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையம் நடத்திய பசுமை அமைதி விருதுப் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் வடமாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.யாழ். இந்துக் கல்லூரி மாணவரான செங்கதிர்ச்செல்வன் சேந்தன் என்ற மாணவனே வட மாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவருக்கான தங்கப்பதக்கத்தை பேராசிரியர் எஸ்.ஏ.நோபேற் வழங்கிக்...

கனவுகள் வளர்த்திடுவோமே பாடலுடன் Dr.A.P.J. Abdul kalam இன் யாழ் இந்துக் கல்லூரிக்கான விஜயம் பற்றிய ஒளித் தொகுப்பு

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களால் அண்மையில் வெளியிடப்பட்ட சங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள பாடல் ”கனவுகள் வளர்த்திடுவோமே..புதிய கலைகள் வளர்த்திடுவோமே..இந்துவின் மைந்தராய் இமையத்தை வென்றிடவேண்டும்.”எனும் பாடல். இப்பாடலில் Dr.A.P.J. Abdul kalam ,இன் “இளைஞர்களே கனவு காணுங்கள்” என்ற வார்த்தைக்கு அமைய அவருடைய அனுபவங்கள், தத்துவங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு பாடப்பட்டது இப்பாடல். (more…)
Ad Widget

சட்டக்கல்லூரியில் புதிய நடைமுறை

சட்டக்கல்லூரியில் கற்கையினை மேற்கொள்பவர்களுக்கு வயதெல்லைக்கான வரையறை நீக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு முதல் சட்டக்கல்லூரியில் சட்டம் தொடர்பான கற்கை நெறிக்கான தகுதிகாண் பரீட்சையில் தோற்றுபவர்களுக்கு வயதெல்லையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் சட்டம் தொடர்பான கற்கை நெறிக்கான தகுதிப்பரீட்சைக்கு தோற்றுபவர்கள் 35 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒரு வரையறை காணப்பட்டது.ஆனால் இவ்வாண்டு...

முதுகல்விமாணிக் கற்கைநெறி ஜனவரி முதல் யாழ்ப்பாணத்தில்

தேசிய கல்வி நிறுவகம் நடத்தும் முதுகல்விமாணிக் கற்கை நெறி முதன்முறையாக யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.கல்விவாண்மை, அனுபவம் கொண்ட தகுதியானவர்களைக் கொண்டு இந்தக் கற்கைநெறிக்கான விரிவுரைகள் இடம்பெறவுள்ளன.யாழ். மாவட்டத்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள விரிவுரையாளர்கள் மட்டுமே இதற்கு விரிவுரையாற்ற வேண்டும் என்ற மட்டுப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது. (more…)

உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று 25.12.2011 வெளியாகும்

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளிவரவுள்ளன என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுவதுடன் நாளை நண்பகல் முதல் கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தில் சென்று நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ் இந்துக்கல்லூரி மாணவனுக்கு தென்னாபிரிக்காவில் வெண்கலப் பதக்கம்!

தென்னாபிரிக்காவில் கடந்த டிசம்பர் 1ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்ற்ற 8 ஆவது சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் சுந்தரேஸ்வரன் வித்தியாசாகர் இலங்கை சார்பாகவும், யாழ் இந்து கல்லூரி சார்பாகவும் வெண்கல பதக்கத்தை வென்றார்.இலங்கையில் இருந்து 5 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர் அதில் யாழ் இந்துக்கல்லூரி சார்பில்...