- Thursday
- January 16th, 2025
இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 23 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள முப்படையினரின் 20 பயிற்சி நிலையங்கள் ஊடாக கட்டங்கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் (more…)
2013 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான இசட் வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. (more…)
கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் கல்வி அமைச்சின் www.moe.gov.lk எனும் இணையத்தளத்தில் (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில், தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும், சிங்கள மாணவர்களுக்கு தமிழ்மொழியும் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் (more…)
யாழ் பல்கலைக்கழகத்தின் இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கை நெறி புதிய பிரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி 15.09.2014 ஆகும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமானது முகாமைத்துவமாணிக் கற்கை நெறியை Bachelor of Business Management (BBM) நடாத்துகின்றது. (more…)
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் உடுவில் பிரதேச செயலகத்தால், அழகுக்கலையும் மனைப் பொருளியலுக்குமான பயிற்சிநெறி எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலர் க.சாந்தநாயகம் இன்று தெரிவித்தார். (more…)
"மூன்றாவது கண்களால் உலகை பார்ப்போம்" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் புகைப்பட போட்டி ஒன்றை நடத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பொருளியல் வினாத்தாளில் தவறு இடம்பெற்றுள்ளதாக நாளை நிரூபித்தால், நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் இராஜினாமா செய்வேன் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். (more…)
பிரபல பொருளியல் ஆசிரியரான சின்னத்துரை வரதராஜன் இன்று தனது 63 வது வயதில் காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(18-08-2014) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் என்பது...
நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், பரீட்சை மண்டபத்திற்கு செல்லாமல் பரீட்சார்த்திகள் மூவர் பரீட்சைக்கு தோற்றினர் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
யாழ். பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி விஞ்ஞான கற்கைகள் பீடம் கிளிநொச்சியில் மிகவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் தி.வேல்நம்பி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (14.08.2014) இடம்பெற்ற தேர்தலில் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்துடன் இவரது தெரிவு இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் தி,வேல்நம்பி யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்பதும் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கன. ஏற்கனவே கடந்த...
2014 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் ஏற்பட்டுள்ள குழறுபடி தொடர்பில் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணித்துள்ளார். (more…)
இம்முறை உயர்தரப் பரீட்சையின் பொருளியல் விஞ்ஞான வினாப்பத்திரத்தில் குளறுபடிகள் காணப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. (more…)
இலங்கையின் பாரம்பரியமான கல்வி முறைமை வெறுமனே வேலையற்ற பட்டதாரிகளையே உருவாக்குவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்தக் கல்வி முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டியது அவசியமானது என்றும் கூறியுள்ளார். (more…)
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளில் பொருளியல் - 1 வினாத்தாள் தரமற்றதாகவும், பிழையாகவும் இருந்தது என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. (more…)
தரம் 5 புலமைப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி 'அரச புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளுக்கு நிகரான பக்க வடிவமைப்பில்' தயாரிக்கப்பட்ட புலமைச்சுடர் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. (more…)
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலரமப்பரிசில் பரீட்சை வழிகாட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய தொகுப்பு இடம்பெறவில்லை. (more…)
Loading posts...
All posts loaded
No more posts