பாடசாலை விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று(24.07.2023) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல்...

உயர்தர பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி அறிவிப்பு!!

2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதேவேளை, 2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்...
Ad Widget

அடுத்த வருட பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை அடுத்த வருடம் குறித்த நேரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக பரீட்சை காலங்களை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!!

2033 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக பரீட்சையை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஓகஸ்ட்...

சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்த விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியிலும், சாதாரணத் தரப் பரீட்சைகள் 2024 ஆம் முதல் காலாண்டிலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவித்தல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 06 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!!

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (29.05.2023) ஆரம்பமாகியுள்ளது. குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில்...

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை!!

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றுடன் (26.05.2023) விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும் அடுத்த மாதம் 12ஆம் திகதி பாடசாலையின் கற்பித்தல் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் தொடர்புடைய முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்...

பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை!!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை பாடசாலைகள் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான...

பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்!

முல்லைத்தீவு- துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் குறிப்பாக வடமாகாண ஆளுநர், வடமாகாண...

யாழில் பிரபல பாடசாலையில் மாணவிகளுடன் ஆசிரியர் சேட்டை ; பொலிஸார் விசாரணை

வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவிகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர், மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல், பாலியல்...

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!!

வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக ஆக்குவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்....

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு !!

வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து 29 ஆம் திகதி பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வாரிக்கொள்கை மற்றும் அதற்கு எதிரான ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக முன்னதாகவும்...

இன்று முதல் பாடசாலைக்கு விடுமுறை!!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற...

வடமாகாணத்தில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

வடமாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் ஆண்டுகளில் சுமார் 103 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் 49 பாடசாலைகளும்,...

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புதிய தவணை பாடசாலை நடவடிக்கைகள் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்.இந்துக் கல்லுாரி மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயற்சி!

யாழ்.இந்துக் கல்லுாரியில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலையின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும் தெய்வாதீனமாக அருகில் இருந்த மின் வயரில் சிக்குண்டதன்...

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்!!

எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தினத்தில் ஆசிரியர் - அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் - அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள...

ஏனைய பரீட்சைகளும் தாமதமாகலாம் – ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், ஏனைய பரீட்சை அட்டவணை திட்டமிடல்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். நாளாந்த ஊதியம் 2,000 ரூபாய் என வரம்புக்குட்படுத்தப்பட்டதன் காரணமாக ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர்...
Loading posts...

All posts loaded

No more posts