முதல் பல்கலைக்கழகக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பம்

இலங்கையில் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி அமைச்சின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழகக் கல்லூரியில் நேற்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. விரைவில் அது திறந்து வைக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி ஜே. ஜூட் வோல்ட்டன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமுர்த்தியிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த...

சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்குக்கான ஆய்வுகட்டுரைகளை உலகெங்கிருந்தும் கோரும் யாழ் பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தினால் இவ்வாண்டும் 'அறிவு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக உற்பத்தி திறனை மேம்படுத்தல்' என்னும் தொனிப்பொருளிலான சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வரங்கிற்கான ஆக்கங்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் கோரப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் முகாமைத்துவ...
Ad Widget

 யாழ்.தேசியக் கல்வியற் கல்லூரிக்கு அழகியற் பாட கற்கைநெறி அவசியம்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் அழகியற் பாட கற்கை நெறியை மீள ஆரம்பிக்கவேண்டியது அவசியம் என கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் திங்கட்கிழமை (09) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கல்வியற் கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வந்த அழகியல் கற்கைநெறி கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்கை நெறியை கற்பதற்கு...

2015 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கலாம். பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களின் விண்ணப்பங்களை பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இதன்படி...

யாழ். பல்கலைக்கழக கல்லூரியின் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ். பல்கலைக்கழக கல்லூரியின் கற்கை நெறிகளுக்கு வடமாகாண இளைஞர், யுவதிகள் இணைந்து கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள், உயர்கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ப.சிவானந்தன் தெரிவித்தார். கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகில் பல்கலைக்கழக கல்லூரி கட்டிடம் புதிதாக அமைக்கப்படுகின்றது. இதன் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இங்கு வழங்கப்படும்...

உ/த, புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2015ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 23ஆம் திகதியும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒகஸ்ட் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

மும்மொழிகளிலும் சட்டக்கல்லூரி பரீட்சை

சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இனிமேல் விநியோகிக்கப்படும் என்று நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டதரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் எந்தமொழியிலும் விடையளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டக்கல்லூரிக்கான பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்கவேண்டும் என்ற சட்டத்தை...

புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் கோரல்!

2015 - 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஆங்கில மொழி மூலமான இந்தியாவின் காந்தி புலமைப்பரிசில் கற்கை நெறிக்கு இலங்கை உயர் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 22 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த இலங்கை மாணவர்களிடமிருந்து மேற்படி விண்ணப்பங்களை உயர் கல்வி அமைச்சு அதன் இணையத்தளத்தினூடாக கோரியுள்ளது. எனவே விண்ணப்பங்களை www.mohe.gov.lk எனும் இணையத்தளத்தினூடாக பிரவேசித்து பெற்றுக்...

புலமை பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது

புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பிரபல்யமான பாடசாலைகளில் சேர்த்துகொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள்....

மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு இனி தடை

பாடசாலைகளின் தேவைகளுக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதனை உடன் அமுலுக்குவரும் வகையில் தடைவிதிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலை அபிவிருத்திக்காக பழைய மாணவர் சங்கம், வகுப்பு நலன்புரி சங்கம் ஆகியவற்றினூடாக அறவிடப்படும் அனைத்து அறவீடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்று நிருபம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்தரத்துக்கு கணித பாட சித்தி கட்டாயம் – கல்வி அமைச்சு

உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணித பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு...

பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் 28ஆம் திகதி வரை மட்டுமே!

2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது. எனவே தமது பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவோர் உடனடியாக தத்தமது விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகிறன்றனர். இம்முறை மேற்படி பரீட்சைக்கு 2...

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் நிறுத்தப்படும்!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும் என்று உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க நேற்றுப் புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...

பழைய முறைப்படி இனி புலமைப்பரிசில் பரீட்சை!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை பழைய முறைப்படி நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது இதனை கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் பழைய முறைப்படி இரண்டு வினாத்தாள்கள் கொண்டதாக பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசில் கல்வி அமைச்சராக இருந்த பந்துல குணவர்த்தன ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையின்...

இந்திய அரசின் உயர் கல்வி புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இளமாணி ,முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் இந்தியாவில் தொடர்வதற்காக, கலாசார உறவுகளுக்கான இந்தியப்பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கையைச்சேர்ந்த 180 பேருக்கு உயர்கல்வி புலமைபரிசில்களை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது. மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளில் உயர்கல்வியை தொடர்வதற்காக இவை வழங்கப்படுகின்றன.இலங்கை அரசின் உயர் கல்வி அமைச்சின் ஊடாகவே பயனாளர் தெரிவுகள் இடம்பெறும். இலங்கை அரசின்...

விருந்தினர் விடுதி இலவச பயிற்சி நெறிகள் ஆரம்பம்

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தால் இளைஞர், யுவதிகளுக்கான விருந்தினர் விடுதி இலவச பயிற்சி நெறிகள் காரைநகரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் நிர்வாக தலைவர் பி.யோ.சுந்தரேசன் தெரிவித்தார். யாழிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் வளர்ச்சியானது...

இந்திய அரசின் நிதியுதவியில் விவசாயம், பொறியியல் கற்கை பீடங்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய கற்கை பீடங்கள், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன 600 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்படவுள்ளதாக இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சற் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, சனிக்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2012ஆம் ஆண்டு இந்த கற்கை பீடங்களை அமைப்பதற்காக வேண்டுகோள்...

ஆங்கில செறிவூட்டல் பயிற்சி

அமெரிக்க தகவல் கூடத்தின் ஏற்பாட்டில் ஆங்கில செறிவூட்டல் 4 மாதகால பயிற்சி எதிர்வரும் 22ஆம் திகதி முதல் யாழ்.பொது நூலகத்தில் கற்பிக்கப்படவுள்ளதாக யாழ் அமெரிக்க தகவல் கூட அலுவலகம் புதன்கிழமை (07) தெரிவித்தது. ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ள இந்த பயிற்சிநெறியில் உயர்கல்வி கற்போரும் பாடசாலையை...

அரசாங்க பாடசாலைகளுக்கு இன்று முதல் 9வரை விடுமுறை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல அரசாங்க பாடசாலைகளும் இன்று (07) முதல் எதிர்வரும் 09 ம் திகதி வரை மூன்று தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பின்னர் 12ம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்தது. இதேவேளை புனித பாப்பரசரின் வருகையையொட்டி பாதுகாப்பு கடமை களுக்காக கொழும்பு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதி கருதி தெரிவு...

சிறந்த பெறுபேறுகளை பெற்ற வடமாகாண மாணவர்கள் கௌரவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை சிறந்த பெறபேறுகளைப் பெற்ற வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் புதன்கிழமை (31) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. தேசிய ரீதியில், மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த வடமாகாணத்தை சேர்ந்த 23 மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான பணப்பரிசும் வழங்கப்பட்டது. கணிதப்பிரிவில் தேசிய...
Loading posts...

All posts loaded

No more posts